பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் - o 52 e & t w = < * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும் ஆது

இனிக் கதையைத் தெரிந்து கொள்வோம்: “முதலில் இருளில் நீர்ப்பெருக்கம் இருந்தது. தியாமத் என்னும் தாய்த்தெய்வம் நீரின் மேல் நடனமாடிற்று. அதன் கையில் ஒரு பாம்பு இருந்தது. பாம்பின் புணர்ச்சியால் தியாமத் நீரையும், நிலத்தையும் பிரித்தாள். பின்மனிதனைப் படைத்தாள். மனிதனைத் தனது இணைவிழைச்சுக் கூட்டாளியாகக் கொண்டாள். அப்ஸ9 என்பது அவனது பெயர். அப்ஸ்அவும் தியாமத்தும் உலக மக்களின் முன்னோர்கள். நீரில் குழப்பம் உண்டாயிற்று. தேவர்கள் பிறக்கும் முன் நீரில் புயல் உண்டாயிற்று. தேவர்கள் பிறக்கும் முன்னரே தியாமத் பிறந்துவிட்டான். பிறக்கப் போகும் தேவர்களைக் கொன்றுவிட அப்ஸஇவை வேண்டிக் கொண்டாள். ஆனால் தேவர்களின் தலைவர் இயா இச்சூழ்ச்சியை அறிந்தான். அப்ஸஇவை அவன் கொன்று விட்டான். தியாமத் அடங்காக் கோபம் கொண்டாள். அவளது உடலில் இருந்து அசுர விலங்குப் படையைத் தோற்றுவித்தாள். (இயற்கையில் உள்ள விலங்குகளைவிடப் பிரமாண்ட உருவங்கள் கொண்டவை) தனது துணைவனது கொலைக்குப் பழிவாங்கத் தீர்மானித்தாள். அச்சம் கொண்ட தேவர்கள் இயாவின் மகனான மார்டக்கை தியாமத்தோடு போர் புரிந்து அவளால் ஏற்படக்கூடிய பேரழிவிலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டிக் கொண்டார்கள். மார்டக் தன்னை அவர்கள் அரசனாக ஏற்றுக்கொண்டால் போர் புரிவதாகக் கூறினான். அவர்கள் கூட்டம் கூடி அவனை அரசனாக ஏற்றுக்கொண்டார்கள். அவனைப் பெரும்படையோடு அனுப்பி வைத்தார்கள். அவனுக்குத் தேரும் வேலும் வில்லும் அம்பும் கொடுத்தார்கள். புயலை அவனுக்குத் துணைபுரிய அனுப்பினார்கள். மார்டக் தியாமத்தோடு போர் புரிந்தான். அவளுடைய உடலைக் காற்றால் நிரப்பினான். அவள் வாய் திறந்தே இருந்தது. ஒரு அம்பை வாய் வழியாக இதயத்தில் செலுத்தினான். அவள் உடலை இரண்டாகக் கிழித்து, ஒரு பாதியை உயரே எறிந்தான். மேற்பகுதி வானமாகவும், கீழ்பகுதி பூமியாகவும் ஆயிற்று. இதன்பின்மார்டக் விண்ணுலகத்தில் ஒழுங்கை ஏற்படுத்தினான். பின்னர் தனது தந்தையின் உதவியோடு தியாமத்தின் உதிரத்திலிருந்து கிங்கு என்ற படைத்தலைவனையும், மெசபடோமியாவில் வாழ்கிற