பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. வான4:மலை . . . . . . . . . . . . 4 & 4 & to o to 3 + 3, 3 & # sh & கறுப்பு நிறமுடியையுடைய மக்களையும் படைத்தான். இறுதியாக அவன் மக்களும் தேவர்களும் செய்ய வேண்டிய சடங்குகளை நிர்ணயித்தான். மனிதர்களுடைய நடைமுறை ஒழுங்குகளும் அவை குறித்த முன் அறிகுறிகளும் இவ்வாறுதான் என்று விதிக்கப்பட்டன. தேவர்களது கடமைகளும் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டன. 50 தேவாதிபதிகளுக்கு ஆசனங்கள் அளிக்கப்பட்டன. ஏழு தேவாதி தேவர்கள் தோற்றுவிக்கப்பட்டனர். விண்ணுலகை ஆள 300 தேவர்கள் அரசர்களாக நியமிக்கப்பட்டனர். மார்டக் பயன்படுத்திய வலையையும், வில்லையும் செய்த என்லில் என்பவன் பல வலைகளையும் விற்களையும் செய்து கொண்டு வந்தான். மார்டக்கின் தந்தையர்கள் அவனது படைப்பைப் புகழ்ந்தார்கள். அனு என்னும் பெயருடைய தேவர் தலைவன் வில்லை எடுத்து முத்தமிட்டு அதனுடைய சக்தியையும் தங்களுக்கு வெற்றியளித்த இப்புதிய போர்க்கருவியின் திறத்தையும் புகழ்ந்து பேசினான். மார்டக்குக்கு ஒரு கோவில் கட்டினார்கள். தங்களை வணங்குவதற்காக அவன் மக்களைப் படைத்தான். மெசபடோமிய மக்களின் புனைகதைத் திறன் முதன் முதலில் அவ்யக்தமான பிரபஞ்சத்தில் இருந்து நீரும், இருளும், பெண் சக்தியும், ஆண் சக்தியான பாம்பும் பிரிந்ததைக் கற்பனை செய்தது. ஆண் சக்தி பெண்மையின் ஆதிக்கத்திற்கடங்கியே இருந்தது. இது தியாமத்மட்டும் நீரின் மீது நடனம் புரிந்த செயல்மூலம் குறிப்பிடப்படுகிறது. பின்னர் பாம்பு அவளிடமிருந்து தோன்றி அவளை கருவுறச் செய்தது. எனவே பெண் சக்தியே ஆண் சக்தியைப் படைத்து அதனோடு கூடி உலகைப் படைத்தது என்பதே மெசபடோமீயர்களது கற்பனையாக இருந்தது. ஒரு தடவை கருவுற்றதியாமத்துக்கு அதன் பின்னர் உலகைப்படைக்க ஆண் சக்தி தேவையாக இருக்கவில்லை. தானே படைத்த அப்ஸ்அவோடு கூடி அவள் பின்னர் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாள். இப்பொழுது தேவர்களும், மனிதர்களும் படைக்கப்படவில்லை. விலங்குகள் மட்டுமே படைக்கப்பட்டிருந்தன. - இது முதற்பகுதிக்கதை. இக்கதையில் பெண்மைதான் படைப்பிற்கு மூல காரணம் என்பதும், ஆண்மை துணைக் காரணமாக மட்டுமே இருக்கிறது என்பதும் உட்கருத்தாக உள்ளது.