பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - - - - - - - - - - - - - - - - பழங்கதைகளுக பழமொழிகளும் অক্ত தியாமத்தின் படைப்பில் அவளையே அழிக்கக்கூடிய சக்தியான தேவர்கள் சிலர் பிறந்தார்கள். மீண்டும் தேவர்கள் பிறக்கப் பண்டைய கடலில் புயல் தோன்றியது. இது பெண்ணுரிமைச் சமுதாயத்திலிருந்து ஆண் உரிமைச் சமுதாயம் பிறக்கிற நிலையைக் குறிக்கும். புதிய சமுதாயம் பழைய சமுதாயத்தை வன்முறையால் அழித்துத்தான் பிறக்கிறது. பழைய சமுதாயத்தின் ஒழுங்கு அழிக்கப்பட்டு புதிய சமுதாயத்தின் ஒழுங்கு வன்முறையால் தோற்றுவிக்கப்படுகிறது. புதிய சமுதாயத்தில் புதிய போர்க் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய சமுதாயத்தில் வளர்ச்சியடைந்த உற்பத்திக் கருவிகளே போர்க்கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்ணுரிமைச் சமுதாயத்தில் வளர்ச்சியடைந்த கருவிகள் இல்லை. புதிய சமூகத்தில் பயன்பட்ட புதிய கருவிகள்; தேர், வலை, வில், அம்பு, வேல் முதலியன. தியாமத் கற்காலத்துக் கருவிகளையும், உடல் வலிமையையுமே பயன்படுத்தினாள். அனுமான், பீமன், போல. பெண் உரிமைச் சமுதாயத்தில் அரசர்கள் இல்லை. தாயும் மக்களும் தான் இருந்தனர். விலங்குகளைப் போரில் பயன்படுத்தினர். இவர்கள் எப்படி உணவு தேடிக் கொண்டார்கள் என்ற கேள்வியே புராணக் கற்பனையைப் புனைந்தவர்கள் மனத்தில் எழவில்லை. ஏனெனில் அரசும் மதமும் தோன்றிய வளர்ச்சிக் கட்டத்தில் உணவு என்பது முந்திய சமுதாயத்தில் பிரச்சினையாக இருந்தது போல இல்லாத காலத்தில் அதைப்பற்றி அவர்கள் அதிகமாகச் சிந்திக்கவில்லை. தங்கள் மனப்படிமங்களைக் கொண்டே முந்திய காலத்தைப் பற்றியும் அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். தனிச்சொத்துடைமையும், வர்க்க உறவுகளும் தோன்றிய பின்னரே ஆளுவோரும், ஆளப்படுவோரும் தோன்றுகின்றனர். உலகில் தோன்றிய யதார்த்தமே, விண்ணுலகில் நிழலாக அக்கால மக்களின் உள்ளத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும். எனவே ஏழு கடவுள்கள்,50 தேவாதி தேவர்கள், 300 தேவர்கள் விண்ணுலகை ஆளி நியமிக்கப்பட்டதாகக் கதை கூறும். இப்பிரதிபலிப்பின் யதார்த்தம் என்ன? வாய்மொழி மரபு எழுதப்படுகிற காலத்தில் (கி.மு. 2-ம் நூற்றாண்டில்) அடிமைச் சமுதாயம் இருந்தது. அடிமை அரசுகளும் இருந்தன. அரசர்க்கரசனாக மார்டக் விளங்கினான்.