பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 శిష్ణో 每 今 8 h ° * . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் தோன்றவில்லை. நான் களைப்பாக இருந்தேன். களைப்பினால் கடலிலுள்ள ஜீவன்களோடு பிணைக்கப்பட்டிருந்தேன். எனக்கு நிற்க இடம் இல்லை. தனியாகவே இருந்து எல்லா உருவங்களையும் படைத்தேன். என் வாயில் இருந்து r, டெப்மட் (Termut) என்ற இரு தெய்வங்கள் தோன்றினார்கள். இவர்கள் தாம் வேறு ஜீவன்கள் தோன்று முன் தோன்றியவர்கள். நான் சிந்தித்தேன்; பல உருவங்கள் தோன்றின. ஷீவையும் டெப்மட்டையும் எனது தந்தையான நீர்பரப்பு வளர்த்தார். நான் ஒரே கடவுளான பின்னர் என்னுள் மூன்று கடவுளர்கள் இருந்தனர். டெப்மட்டும், rவும் நீர்பரப்பில் மகிழ்ச்சியோடு விளையாடினர். இதன் பின்னர் என் கண்ணை என்னிடம் கொணர்ந்தனர். (கண் - சந்திரன்) எனது உறுப்புகள் பொருத்தப்பட்ட பின்னர் என் கண்ணில் இருந்து நீர் வழிந்தது. கண்ணிரில் இருந்து மக்கள் தோன்றினர். பின்னர் என் கண் பொருந்தியது. அதற்கு மிகவும் கோபம். ஏனெனில் அது இல்லாத காலத்தில் நான் ஒரு கண்ணைப் பொருத்தியிருந்தேன். அது மிகவும் பிரகாசமாக இருந்தது. எனது நெறியில் பழைய கண்ணுக்கு மேல் ஓரிடம் கொடுத்தேன். அவள் (கண் உலகமுழுவதும் அரசு செலுத்தத் தொடங்கினாள். அவள் பூக்கத் தெ டங்கியதும் நெற்றியிலிருந்து விழுந்து விட்டாள். நான் பாம்புகளையெல்லாம் படைத்தேன். ஷிவும், டெப்மட்டும், கெப் (Gebபையும், நட்டையும் (Nut) படைத்தார்கள். இவர்களிருவரும் ஒரே உடலாகி ஹோரஸ், ஆஸிரிஸ் என்பவர்களைப் படைத்தனர். அவர்கள் கடவுள் தலை மேலுள்ள அக்கினி கக்கும் பாம்பைப் படைத்தார்கள். யெத்ஐஸிஸ், நெப்திஸ் என்பவர்களும் அதன் பின் அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்தார்கள்." எகிப்தியர்கள் தங்கள் சமூக வளர்ச்சியின் பயனாகப் பல தெய்வங்களில் ஒரு தெய்வத்தை எல்லாவற்றிற்கும் மேலானதாகக் கருதினார்கள். இத் தெய்வம் அவர்கள் கற்பனையில் தோன்றுவதற்கு முன் பலதெய்வ வணக்கம் அவர்களிடையே இருந்தது. ஒரு தெய்வ வணக்கம் தோன்றிய காலத்தில் அவர்கள் அத்தெய்வங்களை மாபெரும் தெய்வத்தின் படைப்புகளாகக் காட்ட வேண்டியிருந்தது. ஷிவும், டெப்மட்டும் மாபெரும் தெய்வத்திற்கு முன்னரே வணங்கப்பட்ட தெய்வங்கள் நப், கெப், ஹோரஸ், ஆஸிரிஸ், ஐஸிஸ், நெப்துஸ் ஆகிய தெய்வங்களும் அவ்வாறே. இவை பருவதெய்வங்களாக வழிபடப்பட்டன.