பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏரின் பொழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
முகந்தனர் கொடுட்ப உவந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாடு'

(புறம், 33: 1-8)

(வட்டி பனையோலையால் முடைந்த சிறு கூடை ; தசும்பு - பனை; குளக்கீழ் விளைந்த-ஏரிக்கரையின் கீழே விளைந்த: முகந்தனர் கொடுப்ப-அளந்து கொடுக்க)

பாணர் உள்நாட்டு நீர் நிலைகளில் (ஆறு, ஏரி, குளங்களில்) வலை வீசியும் தூண்டில் இட்டும் மீன் பிடித்தார்கள், அவர்கள் பிடித்த மீன்களைப் பாண்மகளிர் ஊரில் கொண்டு போய்ப் பயற்றுக்கும் தானியத்துக்கும் மாற்றினார்கள் என்று ஓரம் போகியார் கூறுகிழுர்.

'முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறை மனையோள்
அரிகால் பெரும்பாறு நிறைக்கும்'

(ஐங்குறு, மருதம், புலவிப்பத்து, 47)

(பாண்மகள்-பாணர் பெண்; கெடிறு-கெளுத்தி மீன் ; மனையோள் - குடியானவன் மனைவி)

'வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வரா அல் சொரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்.'

(ஐங்குறு, மருதம், புலளிப்பத்து, 48)

(வார அல்-வரால் மீன் ; ஆண்டுகழி வெண்ணெல்-ஒரு ஆண்டு பழமையான நெல்)

'அஞ்சில் ஓதி அசை நடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெற் பெரூஉம்'

(ஐங்குறு, மருதம், பலவிப்பத்து, 49)

கடற்கரையைச் சார்ந்த உப்பளங்களில் நெய்தல் நில மக்கள் உப்பு விளைத்தார்கள், உப்பு வாணிகர் மாட்டு வண்டிகளிலே நெல்லைக் கொண்டு வந்து கொடுத்து உப்பை மாற்றிக் கொண்டு போனார்கள்' என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது.

14