பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்திரி

(கோவேறு கழுதைகள்) வெளி நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர் வழங்கப்பட்டது. நாகரிகமுள்ள செல்வ நம்பிகள் அக்காலத்தில் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினார்கள். ஆனால், பொதி சுமக்கவும் சரக்கு வண்டிகளை இழுக்கவும் அவற்றைப் பயன்படுத்தவில்லை, ஊர்தியாக மட்டும் பயன்படுத்தினார்கள், அத்திரிக்கு இராச வாகனம் என்று பெயர் வழங்கப்பட்டது.

பாண்டி நாட்டுக் கொற்கைக் கடலுக்கு அருகில் பரதவர் ஊருக்கு ஒருவன் அத்திரி பூட்டின வண்டியில் சென்றான் என்று சேந்தன் கண்ணனார் கூறுகிறார்.

"கொடு நுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண

(அகம், 350; 6-7)

அத்திரியை ஒருவன் ஊர்ந்து சென்றதை நக்கீரர் கூறுகிறார்.

'கழிச்சுறா வெறிந்த புட்டால், அத்திரி
நெடுநீர் இருங்கழி பரிமெலிந் தசைஇ'

(அகம், 120 : 10-11)

கடற்கழி வழியாக ஒருத்தன் அத்திரி மஜார்ந்து வந்ததை உலோச்சனார் கூறுகிறார்.

"கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பிலும் சேயிறு ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே

(நற்றிணை , 278: 7-9)

மதுரையில் வைகையாற்றில் நடந்த நீராட்டு விழாவிலே சிலர் அத்திரியூர்ந்து வந்தார்கள் என்று பரிபாடல் (10-ம் பாடல் 17-அடி) கூறுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த செல்வக் குடி மகனாகிய கோவலன் கடலாடுவதற்குக் கடற்கரைக்குச் சென்ற போது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது (கடலாடு காதை , அடி 119). சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், 'அத்திரி--

23