பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள். இதற்கு வாணிகச் சாத்து என்பது பெயர். அவர்கள் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார் கள். ஏனென்றால் காட்டு வழிகளில் வழிபறிக் கொள்ளைக்காரர் வந்து பொருள்களைக் கொள்ளையடிப்பதும் உண்டு. கொள்ளைக்காரர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தினர் வீரர்களையும் தம்முடைய சாத்துடன் அழைத்துச் சென்மூர்கள்.

கழுதை

வாணிகர் , வாணிகப் பொருள்களை ஊர் ஊராகக் கொண்டு செல்வதற்குக் கழுதைகளை பயன்படுத்தினார்கள், பாறைகளும் குன்றுகளும் உள்ள நாடுகளுக்குச் செல்ல கழுதைகள் முக்கியமாகப் பயன்பட்டன. கழுதைகளின் முதுகுகளின் மேல் சரக்குப் பொதிகளை ஏற்றிக் கொண்டு வணிகச்சாத்து (வணிகக் கூட்டம்) ஒன்று சேர்ந்து போயிற்று. எல்லைப்புறங்களில் வழிபறிக் கொள்ளைக்காரர் வழிபறித்துக் கொள்ளையிடுவதும் உண்டு. அவர்களை அடித்து ஓட்டுதற்கு வாணிகச் சாத்தர் வில் வீரர்களையும், வாள் வீரர்களையும் துணையாக அழைத்துச் சென்றார்கள், வாணிகப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அவர்கள் நாள் நிமித்தம் பார்த்து நல்ல வேளையில் புறப்பட்டனர். வழிபறிக் கொள்ளைக்காரர் இவ் வீரர்களையும் கொன்று பொருள்களைக் கொள்ளையடிப்பதும் உண்டு.

'விளரி பரந்த கன்னெடு மருங்கின்
விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்
மைபடு திண்டோள் மலிர ஆட்டிப்
பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் சுமழும் ஞாட்பு.'

(அகம், 89: 9-14. மாங்குடி மருதனார்)

(பொறைமலி-பாரம் நிறைந்த; நெடுநிரை-நீண்ட வரிசை)

'நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றை
புறநிறைப் பண்டத்துப் பொறை'

(அகம், 343: 12-13. மருதனிளநாகனார் )

(ஏற்றை -ஆண் கழுதை)

25