பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் சாவகம் என்று பெயரிட்ட இந்தத் தீவை வட நாட்டார் யவ தீவம் சான்று பெயரிட்டிருந்தார்கள். அக் காலத்துச் சீனர் இந்தத் தீவை 'யெ தீயவோ' என்று பெயரிட்டழைத்தார்கள், 'யவ தீபம்' என்பதைத் தான் சீனர் 'யெ தீயவோ' என்று கூறினார்கள். சீன நாட்டார் யவ தீவுடன் (சாவா தீவுடன்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கிருஸ்து சகாப்தத்தின் தொடக்கத்திலேயே வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

சங்க காலத்துத் தமிழர் அக்காலத்திலேயே சாவகத் தீவுடன் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். சாவகத் தீவை அவர்கள் ஆபுத்திர நாடு என்றும் கூறினார்கள் என்பதை மணிமேகலைக் காவியத்திலிருந்து அறிகிறோம். ஜாவா தீவின் தலைநகரம் நாகபுரம் என்றும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சாரகத்தை யரசாண்ட அரசன் பூமிசந்திரனுடைய மகனான புண்ணியராசன் என்றும் இந்த அரசர் பரம்பரை இந்திய அரசர் பரம்பரை என்றும் மணிமேகலை கூறுகிறது.

'நாக புரமிது நன்னகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் பண்ணிய ராசன்'

(மணி, 24: 179-180)

நாகபுரத்து அரண்மனையைச் சார்ந்த சோலையில் தருமசாரணர் என்னும் பௌத்த சமயத் துறவி இருந்தார். (மணி, 25:2) காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த மணிமேகலை (கோவலன் - மாதவியின் மகள் ) பௌத்த மதத்தைச் சார்ந்து பிக்குணியான பிறகு, அப்பட்டினத்திலிருந்து சாவகத் தீவின் தலைநகரமான நாகபுரத்துக்குப் போய் அங்கிருந்த தருமசாரணரை வணங்கி அங்குச் சிலநாள் தங்கியிருந்தாள். அவள் புண்ணியராசனைக் கண்டு பிறகு திரும்பி வந்தாள் என்று மணிமேகலை காவியம் கூறுகிறது. மாதவி மகன் மணிமேகலைச் சாவகத்துக்குப் போனதும் அங்கிருந்து திரும்பி வந்ததும் ஆகாயத்தின் வழியாக என்று மணிமேகலைக் காவியம் கூறுகிறது, (மணிமேகலை 25 ஆம் காதை) மணிமேகலை சாவகத்துக்குப் போனது கடல்வழி

59