பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறைமுகத்தில் அக்காலத்தில் யவன வாணிகர் எந்து வாணிகம் செய்தனர். தாலமி (ptolemy) என்னும் யவனர் இந்தத் தொண்டியைத் தைண்டிஸ் (Tyndis) என்று கூறியுள்ளார். இங்கு நடந்த வாணிகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை.

மாந்தை

சேரநாட்டுத் 'துறைமுகப் பட்டினமாகிய மாந்தை துறைகெழு மாத்தை', 'கடல்செழு மாந்தை' என்று கூறப்படுகின்றது. மாந்தை மரந்தை என்றும் கூறப்பட்டது. மாந்தைப் பட்டினத்தில், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பொன் வயிரம் மணி முதலான பெருஞ் செல்வத்தை ஆம்பல் கணக்கில் (ஆம்பல் என்பது கணிதத்தில் பெருந்தொகையைக் குறிப்பது) புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார். இந்தப் பெருஞ் சேரலாதன் கடற்கொள்ளைக்காரர் குறும்பரை அடக்கினவன்.

'வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய்பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவண்
நிலத்தினத் துறந்த நிதியம்'

(அகம், 127: 3-10)

இந்தத் துறைமுகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை .

முசிறித் துறைமுகம்

முசிறித் துறைமுகப்பட்டினம் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களில் பேர்போனது. அக்காலத்தில் அது, கிழக்குக் கடற்கரையில் உலகப் புகழ் பெற்றிருந்த காவிரிப் பூம்பட்டினம் போல மேற்குக் கரையில் உலகப் புகழ் பெற்றிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உண்டான

92