பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



போலக் கோழி கூவுதலாலே விடிதலை உணர்ந்து துயிலெழுவதில்லை என்று கூறப்படும் செய்தி வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்-பூவின்
இதழ்கத் தனைய தெருவம் இதழகத்
தரும் பொகுட் டணைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல் அல்லதை
வாழியும் வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம்பேருள் துயிலே2

என்று மதுரை நகர அமைப்பைப் பற்றிக் கூறுகிறது. கூடல், நான்மாடக் கூடல், ஆலவாய் போன்ற பிற பெயர்களும் மதுரை நகருக்கு வாய்த்திருந்தன. சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி, திருவிளையாடற் புராணம் ஆகிய மூன்று நூல்களில் இருந்தும் மதுரை நகரமைப்பைப் பற்றி மிகுதியான செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம்.

சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி ஆகிய நூல்கள் கூறும் மதுரை பற்றிய செய்திகளைக் காணுமுன் திருவிளையாடற் புராணம் கூறுகிற விவரங்களைக் காணலாம்.

முன்னிரண்டு நூல்களினும் காலத்தாற் பிற்பட்டது ஆயினும் மதுரை நகரம் எப்படித் தோன்றியது என்பது பற்றிய புராண வரலாறு திருவிளையாடற் புராணத்தில் கூறப்புட்டுள்ளது.

நகரின் தோற்றம்

நகரம் தோன்றுவதற்கு முன் மதுரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடம்ப மரங்கள் செறிந்த வனமாக