பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

219



அருவிகளும், செய்குன்றுகளும், மலைகளும், மகிழ்வூட்டும் நறுமணச் சோலைகளும், நீர்நிறை பொய்கைகளும் கோநகரில் அரண்மனையைச் சூழ இருந்தன.25

அரண்மனை மதில் வாயில் மிக உயர்ந்து காணப்பட்டது.26 அரண்மனை எல்லைக்குள் பல மாடமாளிகைகள் இருந்தன. அரச மகளிர் வாழும் அந்தப்புரங்கள் இருந்தன. பேரரசன் ஒருவனுக்குரிய பலவகைக் கட்டடங்களும், அரசனது கொலு மண்டபமும், நாடக அரங்கமும், கோவிலும், பிறவும் அரண்மனையில் சிறப்புற்று விளங்கின.27

இயற்கை வளம்

மலைபடு பொருள்களின் வளத்தால் இயற்கைச் செல்வங்களைக் குன்றக் குறவர் அரசனுக்குப் பரிசளித்து மகிழ்வது வழக்கமாயிருந்தது.28

துறைமுகம்

தொண்டி, முசிறி இரண்டும், சேரர் தம் துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. மேலைநாட்டைச் சேர்ந்த பிளைநி முதலியோர் திண்டிஸ் (தொண்டி) முசிரிஸ் (முசிறி) என்றும் இவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். புகாரைப் போலன்றி இவை சிறிய துறைமுக நகரங்களாகவே இருந்தன.29

கோட்டையும் அகழியும்

வஞ்சி மாநகரின் கோட்டையும், அகழியும் மதுரை நகரமைப்பில் வந்தது போல் அமைந்திருந்தன என்று கூறுவதற்கு ஏற்றபடி ஒரே வகையில் இருந்தன. சேரர் சின்னமாகிய விற்கொடி பறந்தது என்ற ஒன்றே வேறுபாடு.