பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


களும்,அரண்மனைகளும், மிகப் பெரியவையாகவும் சிறப்பானவையாகவும் அமைய இதுதான் காரணம்.

கிரேக்கர், உரோமானியர் ஆகியோர்களின் கட்டடக் கலை இன்று ஐரோப்பாவில் சிறப்பாகக் கருதப்படுவது போலவே திராவிடக் கட்டடக் கலையின் பழமையும் நயமும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் முந்தியவை என வரலாறு கூறுகிறது.

கட்டடக் கலையின் பழைமை

உலகின் மிகப் பழைமையான இனங்களுள் முதல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது திராவிட இனம் - தமிழினம் என்ற கருத்துப் பல அறிஞர்களுக்கும் உடன்பாடானது. அம்முறையில், கட்டடக் கலையில் மிகப் பழைமையானதும், விந்திய சாத்பூர மலைகளுக்குத் தென் பகுதியாக உள்ளதுமான தக்கணம் - தமிழ் நாட்டை உள்ளிட்ட திராவிட நாடேயாம்.

பண்டைத் தமிழ் மக்களின் கைவண்ணத்தால் எழுந்து வானைத் தொட்டு முத்தமிட்டு உயர்ந்து நிற்கும் கோபுரங்களும், மாடங்களும், மாளிகைகளும், பழந்தமிழர்களின் கட்டடக் கலை வண்ணத்தின் அற்புதத் திறமைக்குத்தக்க சான்று பகர்கின்றன.3

மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளின் அகழ்வாராய்ச்சியில் கண்ட சிந்துவெளி நாகரிகக் கலையே திராவிடக் கட்டடக் கலைதான் என்று மேலை நாட்டறிஞர்களும் ஒருவாறு உடன்படுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்பகுதிகளில் காணப்படும் கட்டட அமைப்புகளும், நகர அமைப்பு முறைகளும், அறிவியலில், உச்ச நிலையடைந்துள்ளதாகக் கருதப்படும் இன்று, அனைத்து வசதிகளுடனும் திட்டமிட்டுக் கட்டப்படும் கட்டடங்களையும், நகர் அமைப்பு முறைகளையும் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.