பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

29

இவ்வுண்மை மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கட்டடக் கலையில் தலைசிறந்து விளங்கினர் என்பதற்குத் தக்க சான்றாகின்றது.4

புதிய கற்காலம்

கி. மு. ஐயாயிரம் முதல் எண்ணூறு வரை உள்ள காலத்தைப் புதிய கற்காலம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.5

புதிய கற்காலத்தில் மனிதர் ஓரிடத்திலேயே தங்கி நிலைத்து வாழக் கற்றிருந்தனர். மனிதர்களின் வாழ்0விலே குறிப்பிடத்தக்க வளர்ச்சியும், முன்னேற்றமும் நிலவின என்ற உண்மை புலனாகிறது.

பதியெழு வறியாப் பழங்குடி
பழவிறல் மூதூர்6

என்றெல்லாம் இவ்வாறு ஓரிடத்தில் தங்கி வாழ்தல் புகழப்படுவதைக் காணலாம்.

சிற்றூர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கோட்பாட்டில் வாழத் தொடங்கின. அப்படி இணைந்த ஊர்களே ஒரு நாடாயிற்று. அந்நாட்டினர் தங்களுள் ஒருவனைத் தலைவனாக்கிக் கொண்டனர். நாளடைவில் அவனே மன்னன் ஆனான். ஒரு நாடு அண்டை அயல்நாடுகளுடன் தன்னிடம் அதிகம் இருப்பதைக் கொடுத்து அவர்களிடம் அதிகமாக இருப்பதைப் பெறும் பண்டமாற்று முறை தொடங்கியது.7

இப்பண்டமாற்று முறையிலும் வேறு உறவுகளிலும் நாளடைவில் சில தகராறுகளும், பிணக்குகளும் எல்லைச் சிக்கல்களும் மூள்வது இயல்பாயிற்று. மெல்ல மெல்ல அவை போராக மூண்டன.

இக்காலத்தில்தான் உரிமை, உடைமை உணர்ச்சிகள் தோன்றின. உரிமை, உடைமைகள்தாம், தமது, தங்களது