பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

73


இராசியும் மனைவும்

கட்டடம் கட்டுமுன் மனைக்குரியவரது இராசியோடு ஒத்த இடமும் திசையும் கவனிக்கப்பட வேண்டும் என மனைநூல் எடுத்துக்கூறுகிறது. அது பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு அமையும். 60

1. மேஷ ராசி — ஊரின் வடக்குப் பக்கம் ஆகாது - ஏனைய திசைகளில் அமைக்கலாம்.
2. ரிஷப ராசி — ஊரின் நடுப்பகுதி ஆகாது.
3. மிதுன ராசி — மத்தியப் பகுதி கூடாது.
4. கடக ராசி — தெற்குப் பகுதி ஆகாது.
5. சிம்ம ராசி — மத்தியப் பகுதி ஆகாது.
6. கன்னி ராசி — தென்மேற்குப் பகுதி ஆகாது.
7. துலா ராசி — வடமேற்குப்பகுதி ஆகாது.
8. விருச்சிக ராசி — கிழக்குப் பகுதி ஆகாது.
9. தனுசு ராசி — மேற்குப்பகுதி ஆகாது.
10. மகர ராசி — ஊரின் நடுப்பகுதி ஆகாது.
11. கும்ப ராசி — வடகிழக்கு அதுகூலப் பலனில்லை.
12. மீன ராசி — தென்கிழக்கு யோகம் தராது. 61

ஒவ்வோர் இராசிக்காரரும் ஊரின் திசை அறிந்து அவரவர் இராசிகளுக்கு ஏற்ப வீடு அமைப்பதுதான் அநுகூலமானப் பலனைத் தரும் என்பது மனைநூல் வழக்கு.