பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


வீட்டுக்குரிய கட்டடம் கட்டப்பட இருக்கும் மனை ஒழுங்காக இருக்க வேண்டும். கோணல் மாணலாக இருக்கக் கூடாது.

மத்தளம் போன்றும், கொட்டைப் பாக்கு உருவம் போன்றும், கத்தரிக்கோலைப் போன்றும் உள்ள மனை களில் வீடு கட்டக்கூடாது. கோயில் நிலம், வளைகள் உள்ள நிலம், தண்ணிர் இடையறாது பாயும் நிலம் ஆகியவற்றைக் கட்டடம் கட்டுவதிலிருந்து அறவே தவிர்க்க வேண்டும். கிழக்கு மேற்கு அகலங்கள் குன்றிய மனையில் கண்டிப்பாகக் கட்டடம் கட்டக்கூடாது. இவை மரபுகள், நம்பிக்கைகளாகக் கூறப்பட்டிருப்பினும் நடைமுறைப்படி பார்த்தாலும் மேலே கூறிய கோணல் மாணலான மனைகளில் கட்டடம் கட்ட இயலாதென்பது புலப்படும்.

கிணறு - வாசல் - சுவர்கள்

வீட்டின் மேற்குப்புறத்தில் கிணறு வெட்டுவதே நற்பலன் தரும். வடமேற்கு முனையில் கிணறு வெட்டி னால் புத்திரர்களுக்குக் கெடுதல் உண்டாகும். வடக்குத் திசையிலோ, ஈசான்யமூலையிலோ கிணறுகள் அமைத்தால் வாழ்வு வளம் பெற்று ஏற்றமும் முன்னேற்றமும் தொடர்ந்து கிடைக்கும். வீட்டின் கிழக்குத் திசையில் கிணறுகள் அமைப்பதுகூட நற்பலனையே தரும் என்பது மனைநூல் நம்பிக்கை.

அக்கினி மூலையில் (தென்கிழக்கு) கிணறு அமைத்தால் தீப்பட்ட பண்டம் சிறிது சிறிதாக எரிந்து கருகி அழிவதுபோல் நாளுக்கு நாள் அந்தக் குடும்பம் அழியும் என்கிறது. மனைநூல்.

வீட்டின் தெற்குத் திசையில் கிணறு அமைத்தால் குடும்பத்தில் உயிர்ச்சேதம் விளையும். அடிக்கடி அப்படிப் பட்ட சேதங்கள், நிகழலாம். நிருதி மூலையில் (தென் மேற்கு மூலை) கிணறுவெட்டினால் குடும்பத்தில் உள்ள