பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

77

வாகவும் அமையும்படி வீடு கட்டினால் நலிவும் நட்டமுமே ஏற்படும் என்பர். * .

கதவுகள்

வீடு கட்டியதும் வாசற்படிக்கும் அறைகளின் முகப்புக்களுக்கும் கதவு பொருத்துகிறோம். இக் கதவுகள் குறையின்றி ஒட்டுப் போடப்படாமல் - ஒருவகை மரத்தில் அமைய வேண்டும்.

கதவைத் திறந்து வைத்தவுடன் கதவு தானாகவே இரைச்சலுடன் திரும்பச் சென்று மூடிக்கொள்வது நற். பலன் தராது. அப்படிப்பட்ட வீட்டில் உயிரிழப்பு நேரிடும். சில ஆண்டுகளில் வீடே பாழடைந்து விடும்.64

ஒரு கதவு நின்ற நிலையில் அப்படியே நிற்குமாயின் அம்மனையிலுள்ளோர் நிலை பேறுள்ள நல்வாழ்வு வாழ்வார்கள்.

கதவைச் சாத்தும்போது கழுதை கணைப்பது போன்ற குரல் அல்லது செக்கு ஆடுவது போன்ற ஓசை எழுமானால் தீராத கவலைகள் உண்டாகும்.

யானைக்குரல் போலவும் சங்கொலி போலவும் ஓசை உண்டானால் சகல நலங்களும் விளையும்.

கதவை அடைக்கும்போது மந்த கதி கொண்டு. உடலில் காணும் வாதம், பித்தம் என்னும் இரண்டு நாடி போல நடந்தாலும் அல்லது கிளியைப் போலக் கீச்சிட்டாலும் நடுக் கட்டத்தில் ஆணி ஒன்று ஊனமாகியிருக்க வேண்டும். அவ்வாறாயின் அம்மனைக்குரியோனுக்கு நோயை உண்டாக்கும்.

கதவைச் சாத்தும்போது சிக்கிக்கொண்டு செக்கோசை போல இரைச்சலிட்டால் அம்மனையில் மக்கட்பேறு வாய்க்காது. மனைவி மரணமடைவாள். மனக்கவலை நேரிடும்.