பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


கதவைச் சாத்தும்போது கரும்பாலை எந்திரம் போல ஓசை எழுமாயின், புத்திர நாசம், பெண்பழி, மிக்க துயர் யாவும் நேரிடுமாம்.

நாய் ஊளை இடுவது போலவும், பேய் அழுவது போலவும், கதவு சத்தமிட்டால் வீட்டுக்கு உரியவர் பிணி மிகுந்து நொந்து தொல்லைப்படுவார்கள். செல்வம் அழிந்துபடும். நாரை கத்துவது போல் ஒலியுண்டானால் நீண்டகாலம் செல்வம் நிலைத்திருக்கும். புதையல் வைக்கு மளவு தனம் பெருகும்.

தள்ளிய கதவு சடக்கென்று வலியன்போல் துள்ளிக் கத்தினால் துக்கம் அதிகரிக்கும். மனைவி சோரம் போவாள். புத்திரர்கள் நாசமடைவர். பல துன்பங்கள் திடுமென நேரிடும்.

நரியைப் போல் கதவு ஊளையிடுமானால் பெண்கள் துன்பப்படுவர். சில காரியங்கள் கைகூடும் எனினும் திடி ரென மக்கள் மாள்வர். வீரியம் குன்றும்.

கழுதை ஒலி பழுதைக் கொணரும். பகை, மெலிவு அழுகை, சிறுமை, இறப்பு நேரிடும்.

வண்டுபோல் ஒலி நன்மை தரும். மக்கட்பேறு சிறப் பாக வாய்க்கும். ஆமை போல் ஒலி மனைவியின் உயிருக் குச் சேதம் விளைவிக்கும். நீண்ட கதவு, ஊழிபோல முழங்குமானால் பொன்னும் பொருளும் மணியும் நிறைந்து வாழ்வர். சங்குபோல் சாத்தித் தாளம்போல் மூடுமானால் பொலிவோடு வாழ்வர். நன் மனையாள் கிட்டுவாள். புத்திரப்பேறு மிகுதி. பொன்னும் பொருளும் கொழிக்கும்.

கரும்பாலைச்செக்கு போலச் சிக்கிச் சிக்கிக் கதறும் ஒசை எழுந்தால் மனைக்குரியோன் ஊரை விட்டே ஓட நேரிடும். மைந்தன் நோயுற்று அழிவான். குடும்பம் கெடும்.