பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

111



நாயின்குரைப்பால்திங்களின் பெருமை குன்றாது நாயின் அறியாமையே உணரப்படும். அதுபோலவே, பெரியாரைப் பழிக்கும் சிறியவரே அவமானமடைவர் என்பது கருத்து. "திங்களை நாய்குரைத் தற்று' என்பது பழமொழி. 228 229. செல்வமும் திட்பமும் . பெரிய மலைநாடனே ஒருவர் புண்ணியம் உடையவரா னால், அரிய விலைமதிப்புள்ள மாட்சியுடைய ஆபரணங்களும் நிரம்பிய பொருளும், இடம் மாறுபட்டாலுங் கூட வந்து வாய்த்துவிடும். அதற்குத் தகுதியில்லை என்ற காரணத்தாலும் அது அவரைவிட்டுப் பிரிவதில்லை. இத் தன்மையுடையதான செல்வத்தைக் காட்டிலும், உள்ளத்து உறுதியான நன்னெறி நிற்றலே சிறப்பு உடையதாகும். g -

அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும் திருவுடைய ராயின் திரிந்தும் வருமால் பெருவரை நாட! பிரிவின்றதனால் திருவினும் திட்பம் பெறும். செல்வம்தியோரிடத்தும்சேர்வதால்,அதனைவிரும்பாது, உறுதியுடன் ஒழுக்க நெறியிலே நிற்கவேண்டும் என்பது கருத்து. 'திருவினும் திட்பம் பெறும் என்பது பழமொழி. 229 230. புண்ணியவான் பொருள் உடையான்

பொருதலுக்கு உரிய படைக்கலனான வேல்போன்ற கண்களை உடையவளே! அருள் உடையவரான நல்லவரும், மற்றும் அருள் அற்றவரான பொல்லாதவரும் யாவராயினும், பொருள் உடையவர்களாயிருந்தனராயின், அவரைப் புகழ்ந்து பேசாதவர் கள் எவரும் இல்லையாவர். அதுதான், நல்ல ஊழ் உடையவர் களின் பொருளை, இருவர் தம்முள் போட்டி போட்டுக் கொண்டுமதித்து வாங்கிக்கொள்ள முயலுவது போன்றதாகும்.

அருள் உடையாரும் மற்று அல்லாதவரும் . பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை; பொருபடைக் கண்ணாய் அதுவே திருவுடையார் பண்டம் இருவர் கொளல். பொருளுடைமை நல்லூழால் வந்து அமையும் அதனை உடையவர் பலர் புகழ்ச்சிக்கும் உரியராவர்; அவர் தன்மைபற்றி எவரும் கருத மாட்டார் என்பது கருத்து. 'திருவுடையார் பண்டம் இருவர் கொளல் என்பது பழமொழி.இருவர் என்றது . நல்லவரையும் கெட்டவரையும் ஆகும். 230