பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

பழமொழி நானூறு மூலமும் உரையும்



317. காலத்தால் பயன் பெறுக - சிறப்பு உடைய மன்னர்களை, அவர்க்குச் செவ்விதான காலத்தை நோக்கித் திறமையுடன் ஒன்றை எடுத்துச் சொல் பவர்களுக்கு, ஆகாத காரியம் எதுவுமே இல்லை.வெற்றிச்சிறப்பு டைய அத்தகைய மன்னர்களுக்கு உயிர் போன்ற நிலைமையினராயிருந் தாலும், புறமாக இருக்கும் அமைச்சரை விட் அருகே இருக்கும் கூனரே நன்மை அடைவார்கள் என்றும் அறிக.

சிறப்புடைய மன்னவரைச் செவ்விதின் நோக்கித் திறத்தின் உரைப்பார்க்கொன்றாகாத தில்லை விறற்புகழ் மன்னர்க்கு உயிரன்ன ரேனும் புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன். 'அருகே இருந்து சமயந் தெரிந்து தக்கபடி சொல்பவரே அரசரிடம் தம் காரியத்தை எளிதாக முடித்துக் கொள்பவர்கள் என்பது கருத்து. ‘புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்' என்பது பழமொழி. 317

318. பகையின்றித் துணை வேண்டாம்

புலியைக் காட்டினும் பெரும் வலிமை உடையனவே யானாலும், வீட்டிலே எலிகளின் தொந்தரவு இல்லாதபோது, அந்தப் பூனைகளும் பாலைப் பெறுவதில்லை. அதுபோலத் தன்னினுங் காட்டில் வலிமையாளன் ஒருவனைத் தனக்குப் பகையாக உடையனல்லாத ஓர் அரசன்,இளையராயுள்ள படை வீரர்களால் என்ன காரியம் உடையவனாகப்போகின்றான்? தன்னின் வலியானைத் தானுடையன் அல்லாதான் என்ன குறையன் இளையரால்? மன்னும் புலியிற் பெருந்திறல வாயினும் பூசை எலியில் வழிப்பெறா பால். எலியற்ற வீட்டிலே பூனைக்குப் பால் கிடைக்காது; அது போலவே வலிய பகையரசன் இல்லாத மன்னனிடத்திலே படைவீரர்க்கு வேலை கிடையாது என்பது கருத்து பூசை எலியில்வழிப் பெறாபால்’ என்பது பழமொழி, ஒருவருடைய பணி தேவையானபோதுதான்மக்கள் அவரைக் கவனிப்பார்கள் என்பதும் இதனால் அறியப்படும். 318 : 319. கயவர் மேல் வைத்த செயல்

மான் பிணையின் நோக்கினைப் போன்ற மருண்ட நோக்கினையும், மயில்போன்ற சாயலையும் உடையவளே! தம்