பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

161



அரிந்தரிகால் பெய்தமையைக் கூட்டியக் கண்ணும் பொருந்தாமண் ஆகா சுவர். - தீயவர் ஒருபோதும் பிறருக்கு இரக்கப்பட்டு உதவும் மனப்பான்ம்ை உண்டயவராகார் என்பது கருத்து பொருந் தாமன் ஆகாசுவர் என்பது பழமொழி. 331 332. பயன் உள்ளன கற்றல்

மலைநாடனே விளக்கு ஒளியற்றிருக்கிறதென்று கருதியே, அதற்குரிய நெய் முதலியவற்றை ஒருவர் பொருள் கொடுத்து வாங்கி இட்டு, அதனை விளக்கம் உடையதாக்கிக் கொள்கி றார்கள். அப்படி ஏற்றிய விளக்கு துளக்கமின்றி மங்கலாக எரிவதாயின் அதனால் பயன் என்ன? யாரும் பொருளைக் கொடுத்து இருளை விலைக்கு வாங்குவார்களோ?

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி;--விளக்கு மிருள்படுவதாயின், மலைநாட! என்னை? பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள். விளக்கின் ஒளியால் அனைத்தையும் தெளிவாகக்காணலா மென்று அதற்குப் பொருட்செலவு செய்கின்றோம். அதுபோலவே, கல்வி முனையும்போது நல்லறிவு தருவனவான நூல்களையே முயற்சியுடன் கற்க வேண்டுமென்பது கருத்து. பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் என்பது பழமொழி. 332 333. செல்வம் ஊழால் அமைவதுதான் - .

உண்டாகி வளர்ந்த அழகிய உயர்ந்த பனைமரத்தை, அதன்பழத்தைப்பெறுவதற்குவிரும்பிஅடைந்து இரவெல்லாம் அதன டியிலே காத்துக் கிடந்தாலும், தம் வாயினிடத்தே படுதற்குரிய நல்ல ஊழ் உள்ளவரிடத்திலேயே அந்தப் பனம் பழம் கிடைக்கும். அதுபோலவே, இலக்குமியும் சென்று தீண்டுதற்கு உரியவரிடத்திலேயே சென்று தீண்டுவாள் என்று அறிக. - -

ஆஅய்வளர்ந்த அணிநெடும் பெண்ணையை ஏஎய் இரவெல்லாம் காத்தாலும்--வாஅய்ப் படற்பாலார் கண்ணே படுமே; பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும். செல்வம் முயற்சியால் மட்டும் வராது; அதற்கு உரிய முன்வினைப் பயனாகநல்ல ஊழும்வேண்டும் என்பது கருத்து.