பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

165



340. கற்றவர் பழியான செயலைச் செய்தல்

கற்கவேண்டியதென விதிக்கப்பட்ட அறநூற்களைக்கற்று உணர்ந்து, அவற்றிலே கூறப்பட்ட நெறிகளுக்கு மாறுபாடு இல்லாதவராகவும் விளங்குபவர். அந்நூலுக்கு மாறாக எழுந்த வர்களின் நூல்களை எல்லாம் பொருந்தாதெனக் கைவிட்ட வருமாகி ஒரு நிலைமைப்பட்டு வாழ்ந்து வருபவர், தாமே பழியான செயல்களைச் செய்தால் சந்திரனிடத்துப் பட்ட களங்கத்தைப் போல, அது எங்கும் விளங்கித் தோன்றி அவருக்கு இழிவைத் தரும் -

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார் கதிப்பவந் நூலினைக் கையிகந்தா ராகிப் பதிப்படவாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்துப் பட்ட மறு. கற்றவர் செய்யும் பழிச்செயல், அவருக்கு மிகவும் பெரிய அவமானந்தரும் என்பது கருத்து.'மதிப்புறத்துப் பட்ட மறு என்பது பழமொழி. 340 341. மாண்புடையார் சிறப்பு

பலவான விண்மீன்களும் ஒருசேர வானத்திலே விளங்கி னாலும், பரந்த இருளைப் போக்குகின்ற மதியத்தைப்போல அவை நிலவைக் காய்தல் இயலாதனவாகும். அதுபோலவே, . மிகவும் பெரியதான இந்த உலகத்திலே, அறிவில்லாத மூடர்கள் ஆயிரம்பேர் திரண்டனரானாலும், அறிவினாலே மாட்சி மைப்பட்ட ஒருவனைப்போல உலகுக்கு உபகாரமாக விளங்க மாட்டார்கள்.

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால் மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்; பாயிருள் நீக்கும் மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகும் நிலா. ஆயிரம் முடரினும் ஓர் அறிவுடையவனே சிறந்த செயல் களைச் செய்பவனாவான் என்பது கருத்து. 'மதியம் போல் பன்மீனும் காய்கலாவாகும் நிலா என்பது பழமொழி. 341 342. மயில்போன்ற கள்வர் ~

வேல்போன்ற கண்களை உடையவளே! அனைவரும் துயில்கின்ற இரவு வேளையிலே, களவுசெய்து வாழும் வாழ்க்கையை மேற்கொண்டு, வெயில் விரிந்த பகற்காலத்திலே