பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

169



குகளைக் கண்டு அவரைவிட்டு அஞ்சி ஒதுங்குவர் என்பது கருத்து."மன்றத்து மையல்சேர்ந்தற்று என்பது பழமொழி.348 349. உதவும் உறவினர். -

ஒருவருக்குத் துன்பம் வந்தடைந்த காலத்திலே, அவருக்கு நல்ல உறவினர் என்று சொல்லப்படுபவர்கள். நல்ல செயல் களைச் செய்கின்ற மரபினை மேற்கொண்டு, அந்தத் துன்பத்தை நீக்குவார்கள். அப்படி நீக்கும் தன்மை வீட்டிலேயே இருக்கும் மருந்து மரத்தைப்போன்றதாகும். -

அல்லல் ஒருவர் அடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார்--நல்ல வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே மனைமர மாய விருந்து.

தன்னைக் குறைத்தாலும் மருந்தாகி உதவும் மருந்து மரம் போன்றவர், உறவினர்களுக்கு ஆபத்திலே உதவுபவர் என்பது கருத்து.'மனைமர மாய விருந்து’ என்பது பழமொழி. 349 350 அறிவற்றார் செல்வம்

இனிய ஒலியினையுடைய அருவிகள் கற்பாறைகளின் மேலே வந்து வீழ்கின்ற மலைநாட்டிற்கு உரியவனே பழம்ையாக வருகின்ற அறிவினாலே, மாட்சிமையான துணிவுகள் யாதொன்றும் இல்லாத அறிவற்றவர்கள். நன்மையால் மாட்சி மைப்பட்ட செல்வத்தைப் பெறுதல், மாமரமானது மிகவும் காய்த்துத் தன்மேற் பிறர் எறியும் கல்லை ஏற்றுக் கொள்ளு மாறுபோலத் துன்பம் அடைதற்கே ஏதுவாகும்.

தொன்மையின் மாண்டதுணிவொன்றும் இல்லாதார் நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்- இன்னொலிநீர் கன்மேல் இலங்கும் மலைநாட! மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு. -

அறிவற்றார் செல்வம் பெற்றால், பலரும் அவரை வருத்தி அதனைப் பறித்து உண்பார்கள். அது நல்ல வகையிலே பயன்படாது என்பது கருத்து.'மாக்காய்த்துத்தன்மேல் குணில் கொள்ளுமாறு’ என்பது பழமொழி. காய்த்த மரம் கல்லெறி படும்’ என்பதும் நினைக்க 350 351. உயர்ந்தோர் குற்றம் -

மானானது தன் கன்றுக்குப் பாலூட்டிக் கொண்டு இருக்கும் மலைநாடனே வரிசையாகக் கடகத்தைத் தாங்கி