பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

பழமொழி நானூறு மூலமும் உரையும்



ஒற்கப்பட்டாற்றார் உணர உரைத்தபின், நற்செய்கை செய்வார்போல் காட்டி, நசையழுங்க வற்கென்ற செய்கை யதுவால், அவ்வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்.

பசுவுக்குப் புல்லைக் காட்டி, அதன் கழுத்தில் அதனைக் கட்டுவது போன்றதே, இரந்து நிற்பவர்களுக்கு ஆசைகாட்டிக் கழுத்தறுத்தல் என்பது கருத்து. 'வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்'என்பது பழமொழி. 385 386. மறவர் மாண்பு -

'கயல்மீன் போன்று புரண்டு கொண்டிருக்கின்ற மையுண்ட இரண்டு கண்களை உடையவளான இவளின் இளமைப் பருவத்தினை எனக்குத் தருக" என்று வேந்தன் சொன்னால், அவளுடைய அண்ணன்மாரும் ஒப்புக்கொள்ள மாட்டாராயினர்.போர்ப்பறையினை அறைந்து பணைத்ததம் தோள் களைத் தட்டி ஆர்ப்பரித்தனர். இதனால் வரும் விளைவுகளைக் காண்போம் என்றனர். வாழைக்காய் என்றும் இனிதாயிருப்பதல்லாது உப்பு உறைத்தல் என்பதில்லை. இருகயல் உண்கண் இளையவளை வேந்தன் தருகென்றால் றன்னையரு நேரார்--செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால், வாழைக்காய் உப்புறைத்தல் இல்.

மன்னனே தம் தங்கையைக் கேட்டாலும், அவள் இசையா விட்டால், அவளுடைய அண்ணன்மார் போரிட்டு இறக்கவும் துணிவார்களே அல்லாமல், பணிந்து தரமாட்டார் என்பது கருத்து. 'வாழைக்காய் உப்புறைத்தல் இல்’ என்பது பழமொழி. 386 387. நட்பை மறந்தவர் !

நம்மை நன்கு அறிந்தவராக இருந்தும், அறியாதவரைப் போல நட்புக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வார்கள் சிலர். அவரை, நாமும் முன்னே அறிந்தவரைப் போலாது, அவரைப் போலவே உள்ளத்தாற் பிரிந்து அவரை ஒதுக்கிவிட வேண்டும். அப்படிச் செய்வதே, ஒருவன் கைவிட்ட காலத்து, அவனைப் போற்றாது தானும்கைவிடுதலே அவன் செயலுக்கு நல்ல மருந்து என்று சொல்லப்படுவதாகும்.

கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப் பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்