பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

7



எல்லாம்,உடுத்தும், ஆடைக்குப்பின்னரே கருதிமதிக்கப்படுவன அல்லவா? -

அறிவினால் மாட்சியொன்று இல்லா ஒருவன் பிறிதினால் மாண்ட தெவனாம்?--பொறியி:ன் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன, அணியெல்லாம் ஆடையின் பின். ஆடையின் மேல் அவ்வணிகளையும் அணியின் அழகு தரும்.அதுபோல, அறிவுடைமையின்மேல் பிற செல்வங்களும் சேரின் பயன்தரும் இன்றேல் தருவதில்லை. அணியெல்லாம் ஆடையின் பின்’ என்பது பழமொழி ஆடையே முதன்மை யானது என்பது கருத்து. - * , 11 12. வம்புக்காரனின் வாய் I

நன்மை, தீமைகளை அறிந்து நடக்கத் தெரியாதவர்களு டைய திறமையில்லாத சொற்களைக் கேட்க நேர்ந்தால், அதற் காகவருத்தப்படாதவர்போல,அதனைப்பொருட்படுத்தாமல் இருந்து விடுங்கள், பிறர்மீது இரக்கம் இல்லாது பழி தூற்றும் இயல்புடைய வம்பலர்களின் வாயை அடக்குவதற்காகக் கருதிச் செல்பவர்களே, ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட்டு வைக்க முயன்றவர்கள் போன்ற அறியாமை உடையவராவார்கள்.

தெரியாதவர்தம் திறனில்சொல் கேட்டால், பரியாதார் போல இருக்க!--பரிவுஇல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே, அம்பலம் தாழ்கூட்டு வார். பழிகூறித் திரிபவரின் கீழ்மையை அறிந்து, அவர் சொற் களைப் பாராட்டாமல் பொறுக்கும் அறிவுடைமை வேண்டும். அன்றி, அவர் வாயை அடக்க முயல்பவர், ஊர்ப் பொதுவிடத் தைத்தாழிடமுயன்றவர் போலத்தாமே மிகுதியான அவமானம் அடைவார்கள். பரிவு இரக்கம்; துன்பம்; அம்பலம் தாழ்கூட்டு வார்’ என்பது பழமொழி. 12 13. அன்பால்சாதிக்க வேண்டும். - -

அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி அடையு மாறு செய்து, அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது. அங்ங்ணமில்லாமல் நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது தவறானதாகும். அது, கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால்சுரந்து வரும்பொழுது கறந்து கொள்