பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

17



செல்வமும், வறுமையும் ஊழ்வினைப் பயனால் வந்து வாய்ப்பன என்பது கருத்து."ஆகாதார்க்கு ஆகுவது இல் என் பது பழமொழி.ஆள்வினை முயற்சி. - 31 32. மூர்க்கனின் புத்தி மாறுவதில்லை

தான் ஆராய்ந்து உணர்ந்த கருத்துக்களையும், 3❍_Ꮆu) Ꭶ; ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு யாதொன்றும் உறுதிப் பொருள்களைச் சொல்ல வேண்டாம். மூர்க்கன், தான் கொண்டதையே மீண்டும்.மீண்டும்பற்றிக்கொண்டுவிடாதிருப் பவன். நீல நிறத்தினை உண்டதான ஒரு பொருள், என்றும் தன் நிறம் மாறுபட்டுப்பிறிதொன்றாக ஆகமாட்டாதல்லவா?

ஒர்த்த கருத்தும் உலகும் உணராத மூர்க்கற்கு யாதும் மொழியற்க!--மூர்க்கன்றான் கொண்டதே கொண்டு விடானாகும்; ஆகாதே உண்டது நீலம் பிறிது. - - நீலநிறம் பற்றியபின், அது என்றும் அந்தப் பொருளை விட்டு மறைவதில்லை. அதுபோலவே, மூர்க்கனும் தன்புத்தியி னின்றும் எதனாலும் மாறமாட்டான்."மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பதை நினைக்க. "ஆகாதே உண்டது நீலம் பிறிது என்பது பழமொழி.பாடபேதம் உலகும் உணர்வும்: யாதும், உறுதி. - * - 32" 33. கொடியவன் செய்வது செயலாகாது .

வலிமையானது நிலையாகும் தங்கியிருத்தலையுடைய மலைபோன்ற மார்பினை உடையவனே! நத்தையானது உழுது வரைந்தவெல்லாம் பொருள் கொண்டஒரு கணக்கு ஆகுமோ! அதுபோலவே,தம்முடைய தொழில்களைச் செய்து முடிக்கின்ற திறமையுடையவர்கள் செய்யும் காரியங்களைச் செய்வது, கொடுந்தொழிலாளர்களாகிய வெகுளிகட்கு எப்போதாவது கைகூடிவருமோ? வரவே வராது;

தந்தொழில் ஆற்றும் தைைமயார் செய்வன, வெந்தொழிலர் அய வெகுளிகட்குக் கூடுமோ? மைந்திறை கொண்ட மலைமார்ப! ஆகுமோ, நந்துழுத எல்லாம் கணக்கு? - நத்தை கீறிச் செல்லலை உழவு என்று கூறினாலும் அது உழவாகிப் பயன் தராதது என்பது போல செய்வினைத் திறம் இல்லாதவர் செய்யும் காரியங்களும் பயனற்றுக் கைகூடாமற் போம்'ஆகுமோ,நந்து உழுவதெல்லாம்கணக்கு என்பதுபழமொழி