பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

31



60. கிடைத்ததைக் கொண்டு முயல்க

வாய்ப்பத்ற்கு அரியதான ஓர் இடத்தினுள்ளே, முதலிலே ஒருவன் இருப்பதற்கு இடம் பெற்று விட்டானென்றால், அடுத்து, அவன்படுப்பதற்கான இடத்தையும் அங்கேயே பெற்று விடு வான். அதுபோலவே, முதலில் சிறிதளவான ஊதியம் பெற்றுச்செல்வரைச்சேர்ந்தவர்கள்,விரைவிலே பெரிதளவான ஊதியத்தையும் அவரிடமிருந்து பெறுவார்கள். . சிறிதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்

பெரிதாய கூழும் பெறுவர்-அரிதாம் இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும். - . செய்யும் முயற்சியிலே, முதலில் சிறிதான பலன் கிடைத்தாலும், இகழாது நிலைத்து நிற்பவர், விரைவிற் பெரிய பலனையும் அடைவர். இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும் என்பது பழமொழி. . 60 61. தளராத முயற்சியே உயர்வு தரும் - வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும்.கடல்நீர்ப்பெருக்கினையுடைய சேர்ப்பனே தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதிவரையும் முடித்துவிடுகின்றவன் அறிவு டையவனேயாவான்.அங்ங்னம்செயலைச்செய்து முடிப்பவன், வயதில் இளையவனேயானாலும், அவனை அறிவினால் முதிர்ந் தவன் என்றே கொள்ளல் வேண்டும். .

கற்றதொன்று இன்றி விடினும் கருமத்தை அற்ற முடிப்பான் அறிவுடையான்--உற்றியம்பும் நீத்தநீர்ச்சேர்ப்ப இளையோனே யாயினும் மூத்தானே யாடு மகன். . - இறுதிவரையும் ஏற்றத்தை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும்."இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’ என்பது பழமொழி. 61

62. தகுதியற்றவரை விலக்குவதற்கு - காதிற்குழைகளை அலைத்துவிள்ங்கும்.அகன்ற கண்களை உடையவளே! சாகப்போகின்ற காராட்டை உடன்பாடுகொள் ளச் செய்து அதன்பின்னரே அதன் குருதியை உண்டவர் உலகத் திலே எவருமில்லை. அதேபோல, ஒரு காரியத்தைச் செய்வதற்