பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கென்று ஏற்படுத்த்திக்கொள்ளப்பட்டவர்கள்,அந்தக் காரியத் தளவிலே நன்மை செய்யும் தகுதியற்றவரானால், அதனை அவருக்கு எடுத்துக்காட்டி, அவர் சம்மதத்தைப் பெற்று நீக்கி விடுவோம் என்று ஒருபோதும் நினைக்கவேண்டாம். நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின் காட்டிக் களைதும் எனவேண்டா--ஓட்டி இடம்பட்ட கண்ணாய் இறக்குமையாட்டை உடம்படுத்து வெளவுண்டார் இல்.

காரியம் முடிக்கத் தகுதியற்றவரை அவருடைய தகுதியின்மையை உணர்த்திக்காட்டிவிலக்கமுயலவேண்டாம்; உடனேயே நீக்கி விடவேண்டும். இறக்கும்மை யாட்டை உடம்படுத்து வெளவுண்டார் இல்’ என்பது பழமொழி. 62

63. இழந்ததை அடையவே முடியாது

ஒலி முழங்கும்நீரினை உடைய உப்பங்கழிகள் அலைவீசிக் கொண்டிருக்கின்ற கானற் சோலைகளுக்கு உரிய அழகிய சேர்ப்பனே! கழிந்து போயின ஒன்றினை மீட்டுத் தருவதற்கான வழியினை அறிபவர்கள் எவருமே இல்லை.அதனால்,தம்மிடத் திலே உள்ள பொருள்களைத் தாமே போற்றிப் பேணுவதல்லாது, சிறந்தவராகிய சுற்றத்தார் எனக் கருதி, நம்பக் கூடாதவரிடத்திலே, ப்ொருளைப் போற்றுபவர் மறந்துங்கூட விட்டுவைக்கமாட்டார்கள்.

மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால் சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்; கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப! இறந்தது பேர்த்தறிவார் இல். தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும். இறந்தது பேர்த்தறிவார் இல் என்பது பழமொழி. 63 64. கொடுக்கக் கொடுக்கப் பெருகும்

கடற்பரப்பிலே, துறையினின்றும் செல்வனவும் துறை நோக்கி வருவனவுமான தோணிகள் நிலையாக உலவிக்கொண் டிருக்கிற, அசைகின்ற நீர்ப்பெருக்கினையுடைய கடல் நாடனே! 'தம்மிடத்தே வந்து யாசித்தவர்களுக்கு ஒன்றைக் கொடுப்ப தனால்தம் செல்வம் குறைந்துபோய் விடும் என்று நினைத்துத்,

A