பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பழமொழி நானூறு மூலமும் உரையும்



சார்ந்ததும் நிலைகொள்ளாத காலினவராகத் தருக்கி, ஏதும் அடையாதே கெடுவர். ஆராய்ந்து பார்த்தால், இத்தகையவரே உலக்கையின்மேலே இருக்க முயலும் காக்கை என்று சொல்லப். படுபவராவர். e ... -

நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து நிலத்து நிலை கொள்ளாக் காலரே, கானின் ‘உலக்கை மேல் காக்கை என்பர்

உலக்கையை உயர்த்துக்குத்துகின்ற காலத்து, அதன்மேல் காக்கை அமர்வதும் இயலாது. உரலின்கண் இருப்பதை அதனால் உண்ணவும் முடியாது. அதுபோல, மனத்திலே அறியாமையுடைய வர்களின் முயற்சியும் பயனற்றுப் போகும். ‘உலக்கை மேல் காக்கை என்பது பழமொழி. 84 85. பகைவனை அன்பால் வசமாக்க முடியாது

நிலத்தைச் சுற்றினும் சுவர் எடுத்துப் பொருத்தமாக நீர் பெருக்கிவெப்பத்தைத் தணிக்க முயன்றபோதிலும், உவர்நிலம் உள்ளேயுள்ள தன் கொதிப்பு மாறாமல், என்றும் உடைய தாகவே இருக்கும். அதேபோலச் சுற்றத்தார் அல்லாத பகை வர்களை எவ்வளவுதான் தலையளி செய்து போற்றினாலும், அது அவருக்கு நன்மையாகத் தோன்றுவதேயில்லை. விருப்பமற்ற குறிப்பினை உடையதாகவே தோன்றும். தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும் அமராக் குறிப்பவர்க்கு ஆகாதே தோன்றும் சுவர்நிலம் செய்தமையக் கூட்டிய கண்ணும் உவர்நிலம் உட்கொதிக்கு மாறு.

பகைவரை, அவர்க்கு அருள் செய்வதன்மூலம் நமக்கு வேண்டியவராக்கிவிட முடியாது. நம் செயலை அவர்கள் ஐயுற்று அதிகமான உட்கொதிப்பே அடைவார்கள். ஆகவே, அதனைச் செய்பவர் முயற்சி பயனற்றது. உவர்நிலம் உட்கொதிக்கு மாறு’ என்பது பழமொழி. 85 86. கீழ்மக்களுக்குச் செய்த உதவி

பரந்து வரும் கடலலைகள் வெள்ளத்தைப்போல விளங்கும்; கடற்கரைகள் தன்மையுடன் விளங்கும்; அவற்றிற்கு உரியவனான சேர்ப்பனே! ஒருவருக்கு ஒரு துன்பமானது வந்த காலத்திலே, சுற்றத்தாராலும் தம் முயற்சியினாலும் அதற்குத் தகுதியான ஒரு செயலைச் செய்து, அவர் மனம் ஒத்தவராக