பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

47



அது போலவே, ‘செய்யத் தக்கது இது வென உணரும் அறிவுடையவர்கள், தம்மால் மிகவும் பயப்படத் தக்கதான துன்பங்கள் வந்தாலும், தம்மிடத்தே உண்டாகும் துன்பத்துக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். - -

நனியஞ்சத் தக்கஅவை வந்தால் தங்கண் துனியஞ்சார் செய்வது உணர்வார்.--பணியஞ்சி வேழம்பிடிதமூஉம் மலைநாட! ஊழம்பு விழா நிலத்து. அதனை ஊழ்வினைப் பயன் எனக் கருதி அமைந்து தாம் தளராமல் நல்வினைகளிலேயே ஈடுபட்டு வருவார்கள் என்பது கருத்து.'ஊழம்பு வீழாநிலத்து’ என்பது பழமொழி 94 95. அறமே சிறந்த பெருஞ்செல்வம் -

தாம் தேடிப்பாதுகாவலாக வைத்தசெல்வத்தைத் தமக்கு

ஆபத்துக்காலத்திலே உதவும் பெருநிதி யென்று எவரும் -

நினைக்க வேண்டாம்.அதனைத்தாமும் அனுபவித்துப் பிறருக் கும் கொடுத்து, இருமைக்கும் அழகிதாகத் தக்க இடம் பார்த்து, முறையாக அறம் செய்து வந்தால், அதுவல்லவோ,தாம் தளர்ந்த காலத்து உதவும் பெருநிதி என்று சொல்லப்படுவதாகும்.

வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத் துய்த்து வழங்கி இருபாலும்-அத்தகத் தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றே எய்ப்பினில் வைப்பென் பது. - .

'தருமநெறியே இருமையிலும் நன்மை தருவது.இதனை உணர்ந்து பொருளைப் பதுக்கி வைக்காமல் தருமத்தில் ஈடு படுத்த வேண்டும் என்பது கருத்து. எய்ப்பினில் வைப்பென் பது என்பது பழமொழி. - - - 95 96. தீவினை செய்தால் தப்ப முடியாது. - எல்லாவகையினாலும் மிகவும்பெரியவர்களாகவிளங்கும் சான்றோர்களைக், கல்வியறிவில்லாத அறியாமை உடைய வர்கள் பல சமயங்களில் வெறுக்குமாறு செய்து விடுகின்றனர். தகுதி நிறைந்து, ஒலி முழங்குகின்ற வளைகளை அணிந்தவளே! சொல்லப்போனால், அதுவே, எருக்கந் தூற்றிலே மறைந்து இருந்துகொண்டு, ஒருவன் யானையை மதம்பாய்ச்சிவிடுகின்ற செயலினைப் போன்றதாகும். -