பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

59



கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் ஓர்த்து இசைக்கும் பறை. பறை, அவரவர் கருத்தை ஒட்டியே ஒலிப்பது பேல, மனமும் அவரவர் கொண்ட கருத்துப்படியே போய்க் கொண்டிருக்கும்,அதனைப்பிறர்தம் கருத்துப்போலமாற்றுதல் எளிதன்று என்பது கருத்து."ஒர்த்தது இசைக்கும்பறை என்பது பழமொழி. - " - 118 119. கடன் கொடுத்தல் வேண்டாம்

மடமான தன்மையினையுடைய மானின் நோக்கினை யுடையவளே! சிறந்த மயலினைப் போன்ற சாயலையும் உடையவளே! தம் கையை விட்டுக் கடந்துபோன ஒரு சிறந்த பொருளானது மீண்டும் தம் கைக்கு வந்து சேர்வது என்பதே இவ்வுலகிற் கிடையாது.இப்படிச்சொல்பவர்கள்,பொருளின் இயல்பை உண்மையாகவே உணர்ந்தவர் களாவார்கள். உண்மையாகக், கீழ்மக்களாகிய பிறர்க்குக் கடன் கொடுத்தவன் பெறுவதெல்லாம் வாங்கியவன் அதனை மறுத்துப் பாம்பு குடத்தினுள்ளேயும் கைவிடத் துணிதலாகிய பொய்ப் பிரம்ா ணம் ஒன்றேயாகும். - - கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார் மெய்ப்பட வாறே உணர்ந்தாரால்-மெய்யா மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்! கடன்பெற்றான் பெற்றான் குடம்.

கடன் வாங்கியவர்களுக்கு மீண்டும் அதனைத் திருப்பித் தருவதற்குமனம்வருவதேகடினம்.அதனால்,பொருளைப்பேணுபவன் தீயோருக்குக் கடன் கொடாமல் இருக்க வேண்டும் என்பது கருத்து.'கடன்பெற்றான் பெற்றான்குடம் என்பது பழமொழி:19. 120. மூடனுக்குச் செய்த உபதேசம்

மனத்தினுள்ளே நன்மை தீமைகளைப் பற்றிய கவலை யில்லாதவர்களாகி,நல்லது எது என்பதையும் உணராதவர்கள் ஆகி, மனவலிமையுள்ள மூடர்கள் கூடி மொய்த்துக் கொண்டி ருக்கிற ஒரு சபையினுள்ளே சென்று, உடலளவானே மனிதருள் ஒருவனாக விளங்கும் ஒரு மூடனுக்கு உறுதிதரும் பொருள் பற்றிச் சொல்லுதல் வீணானதாகும், அது கடலினுள் மாம் பழத்தைக்கொட்டுவதுபோன்ற பயனற்ற செயலுமாகும்.

நடலை இலராகி நன்றுணரார் ஆய முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்