பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பழமொழி நானூறு மூலமும் உரையும்



இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும் என்று கடிதவர்தாம் காதலிப்பதாம்காதல் கொண்டு முடிய எனைத்தும் உணர்ா முயறல் கடியன கனைத்து விடல்.

'மன்னன் விரும்புவதை அவனைச் சார்ந்து வாழ்பவர் விரும்புவது கூடாது' என்பது கருத்து. ‘கடியன கனைத்து விடல்’ என்பது பழமொழி. 128 129. அதிகமாகத் துன்புறுத்தக் கூடாது

ஒருநாயை வளர்ப்பவன், அதனை அன்புடன் பேணாமல், கடை வாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதனை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும். ஆகவே, தாம் வறுமையுற்று வந்து தம்மைப் புகலாக அடைந்த உறவினரையும், இவர் நம்மை எதிர்க்க வலியில்லாதவர் என்று கருதிப் பிறருக்கு வெளிப்பட இகழ்ந்து பேசி எவரும் அவரை வருத்தாமல் இருக்க வேண்டும்.

ஆற்றார் இவர்என்று அடைந்த தமரையும் தோற்றத்தாம் எள்ளி நலியற்க-போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும். பலரறிய இகழ்ந்தால் அவரும் எதிர்த்து நிற்பர் என்பது கருத்து. கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்’ என்பது பழமொழி. 129 130. கண்ணே காட்டிக் கொடுக்கும்

மலர்ந்திருக்கும் ஆம்பற் பூக்கள் கலியாண வீட்டைப் போல மண கமழ்ந்து கொண்டிருக்கின்ற, அலைகள் மிகுந்த கடற்கரைப் பகுதிகளுக்கு உரியவனே! யாம் செய்த தீய செயல்கள் வெளிப்படாமல் மலையே மறைத்துக்கொண்டிருக் கிறது என்று நினைத்துக்கொள்வார்கள் தீயவர்கள்தாம் செய்த தீமையால் வரும் பழிபாவங்களை அவர்கள் தெளிந்து உணர்வதில்லை.கண்பார்வை அம்பினும் கூர்மையாகச் சென்று ஊடுருவ வல்லது என்பதை அவர்கள் அறியார்கள்.

யாம்தீய செய்த மலைமறைத்தது என்றெண்ணித் தாம்தீயார் தந்தீமை தோற்றாரால்--ஆம்பல் மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப! கணையினும் கூறியவாம் கண்.