பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

67



135. சொல்வீரர் பயனற்றவர்

வெகுண்டுஎழுந்தபோரினுள்ளே, பகைவர்கள் எல்லாரும் அழியும்படியாகத் தம்முடைய படைச் செருக்கினாலே போர் செய்து வெற்றிக்கொள்ள முயலாத கோழைகள், தாமும் போர் செய்பவர்கள்போல வீறாப்பாகப் பேசிக் கொண்டு தம் அரசனின் சோற்றைச்சாப்பிட்டுத்திரிவார்கள். அத்தகையோர் நிலை உடலால் வலுவற்ற ஒருவர், ஆடைகளாற் புனைந்து தம்மைப்பகட்டித்திரிவதுபோன்றதாகும். - - உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னர் தொலையச் செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத் தருக்கினால் தம்மிறைவன் கூழுண்பவரே கருக்கினால் கூறைகொள் வார். வீரம் செயலிலேதான் திகழ வேண்டும் வெறும் ஆடம்பரக்காரர்களும்,பேச்சுவீரர்களும் வீரர்களாகமாட்டார் என்பது கருத்து. கூறை ஆடை கூறுபடுத்தியது. 'கருக்கினால் கூறைகொள்வார்’ என்பது பழமொழி. - 135 136. பழியில்லாத செயலே செய்ய வேண்டும்

பெரிய சக்கரவாளம் ஆகிய மலை சூழ்ந்த வட்டமாகிய எல்லையிடத்தே சேர்ந்திருக்கும் மகாமேரு முதலாகிய மலை களுங்கூட ஒரு காலத்துத் தேய்ந்தாலும் தேயலாம்; வடுப்பட்ட சொற்களோ என்றுமே மறையாது. ஆதலால், தான் கெட்டுப் போவோம் என்று சொல்லப்படும் இக்கட்டான நிலைமை யிலுங்கூடத் தனக்கு ஒரு வடுவும் ஏற்படாத செயல்களையே ஒருவன் செய்துவருதல் வேண்டும். .. கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும்-நடுவரை முற்றுநீராழி வரையகத் தீண்டிய w கற்றேயும் தேயாது சொல். பழிமறையாது வழிவழிதொடர்ந்து,தன்குடிக்கும்வந்து கொண்டேயிருக்கும். அதனால் அத்தகைய பழிவரும் செயல் களைச் செய்வதினும் ஒருவன் சாதலே நல்லது. ‘கற்றேயும் தேயாது சொல் என்பது பழமொழி. 136 137. வலிமை அறிந்து எழுதல் - -

வேறு ஓர் ஒப்புமையுமில்லாமல், வில்லொடு மட்டுமே சரியாக ஒப்புமையுடையதாக விளங்கும் புருவத்தை உடை