பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

71



அறிதலைக் காட்டினும், அவற்றைத் தக்க ஆசிரியன் மாரிடம்

முறையோடு பாடங்கேட்டு அறிந்து கொள்ளுதலே நன்மை

யானதாகும். -

உணற்கினிய இன்னி பிறிதுழி இல்லென்னும் கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்--கணக்கினை முற்றப் பகலும் முனியா தினிதோதிக் கற்றலின் கேட்டலே நன்று.

தானே கற்று வரும்போது எழும் ஐயங்கள் தீர்வின்றிப் போகும்; ஆகவே பொருள் அறிந்து கற்றுப் பயனடைய வேண்டுமானால், ஆசிரியன் ஒருவனை அண்டிக் கேட்டுத் தெளிவதே சிறப்பு. கற்றலின் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பதும் இதுவே. 143 144. முட்டாள் கற்றும் பயனில்லை

மலைச்சாரல்களிலே, பாறைகளின் மேல் வீழ்கின்ற அருவி கள் பலவாகவிளங்கும் நல்லநாட்டையுடையவனே சொல்லப் போகும் சொற்களைக் கவனத்திலே கொண்டு, துடியிலே பண் உண்டாக்கலாம். அதுபோல, நல்ல அறிவு இயல்பாக இல்லாத வர்களைக் கல்வி போதிப்பதால் அறிவுடையவராக நிலை பெறுத்தவே முடியாது. ஆகையினாலே, நூல்களைக் கற்பதனால் வரும் அறிவு மட்டுமே உலகத்தில் முற்றிலும் செல்லுபடியர்வதில்லை என்று அறிவாயாக

நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல் வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட! கற்றறிவு போகா கடை. -

தட்டுவார் இல்வழித்துடியினின்றும் பண் எழுவதில்லை. அதுபோல, அறிவுறுத்துவார் இல்லாதபோது கடையரின் அறிவும் செயற்படாது. அவர் கற்றும் பயனில்லை. அவர்க்குக் கற்பிப்பது வீண் என்பது கருத்து கற்றறிவு போகா கடை” என்பது பழமொழி. - 144 145 கல்வியை நாளும் கற்க

தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச்சென்று சொல்லும் பொழுதிலெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம்.அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக