பக்கம்:பழைய கணக்கு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

விஷயத்தைக் கல்கியிடம் போய்ச் சொன்னபோது, “ம்... அப்படியா? சரி சரி, பத்திரிகையை நிறுத்தி விடுங்கள். நஷ்டத்தோடு எத்தனை நாள் நடத்த முடியும்? ஏவி. எம் இனி பணம் தரமாட்டார்” என்று ரொம்பச் சாதாரணமாகச் சொல்லி அனுப்பி விட்டார்.

அப்படியானால் கல்கி வெள்ளி மணியில் சேரப்போகிறேன் என்று சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று? அடுத்த சில வாரங்களுக்குப் பிறகுதான் இந்தக் கேள்விக்கு எனக்கு விடை கிடைத்தது.

ராஜாஜி அவர்களின் ஆசியோடு கல்கியும் திரு சதாசிவம் அவர்களும் சம்பந்தி ஆகிவிட்டார்கள்!

சரி, மௌண்ட் ரோடுக்கு வந்த ராஜாஜி பிரஸ் என்ன ஆயிற்று?

அங்கிருந்து கோடம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டு வடபழனி பிரஸ் என்ற பெயரில் பெரிதாக வளர்ந்து இப்போது திரு சரவணன் நிர்வாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதான் வெள்ளி மணி தோன்றி மறைந்த கதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/114&oldid=1146102" இலிருந்து மீள்விக்கப்பட்டது