பக்கம்:பழைய கணக்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாஷிங்டனில் திருமணம் எப்படி நடத்தினேன்?

இருபது ஆண்டுகளுக்கு முன் (1963-ல்) நானும் என் இனிய நண்பர் பரணிதரனும் திருவையாறு தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். நானும் அவரும் சேர்ந்து விட்டால் அரட்டைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இராது. நாள் முழுதும் நகைச்சுவையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருப்போம்.

நாங்கள் இருவரும் காவேரிப் படித்துறையில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருந்தபோது அதே படித்துறையில் நாலைந்து வெளிநாட்டுக்காரர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

தென்னையும் வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும், விபூதி அணிந்த ரசிகர்களுக்கும் இடையே அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருந்தாதவர்களாய்க் காணப்பட்டார்கள். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார் பரணிதரன்.

“இந்த இடத்தில் இவர்களைக் காணும்போது வேடிக்கையா யிருக்கிறது?” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/119&oldid=1146108" இலிருந்து மீள்விக்கப்பட்டது