பக்கம்:பழைய கணக்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சோறு கண்ட இடம்

ரு வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்போடு முடித்துக் கொண்டு விட்டேன். வகுப்பில் என்னைக் காட்டிலும் குறைந்த வயது சிறுவர்களோடு சேர்ந்து படிப்பதற்கு அவமானமாக இருந்ததே காரணம். என்னுடைய தந்தை வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை ஹைஸ்கூலில் சம்ஸ்கிருத வாத்தியார். நானும் அவரிடம் சம்ஸ்கிருதம் படித்தேன். படிப்புக்கும் விசித்திரன் பத்திரிகையில் சேர்வதற்கும் இடையில் ஒரு வருடகாலம் வெட்டிப் பொழுதுபோக்குதான். வில்லிவாக்கம் பிடிக்காததால் சென்னையிலேயே தங்கி எந்தக் குறிக்கோளுமின்றி திரிந்து கொண்டிருந்தேன். காலையில் எழுந்திருக்க வேண்டியது. இருந்தால் சாப்பிட வேண்டியது, இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரி நினைத்துக் கொண்டு எங்கு போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று எனக்கே தெரியாமல் சுற்றிவர வேண்டியது.

அப்போது, 1932-ல் சென்னையின் முகம் வேறு மாதிரியாக இருந்தது. மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் காஞ்சி சங்கரர்ச்சாரிய சுவாமிகள் முகாமிட்டிருந்தார். அங்கே தினமும் சுவாமிகளைத் தரிசிக்க வருகிறவர்களுக்குச் சாப்பாடு உண்டு. ஒரு மாத காலம் அந்த மடத்திலேயே சாப்பிட்டுக் கொண்டு மயிலாப்பூர் வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வானத்தில் ஒட்டடை அடிப்பது போல் டிராம் வண்டிகள் தலைக்கு மேலே இரும்புக் குச்சியை நீட்டியபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். வள்ளுவர் சிலையும், மக்களின் நெரிசலும், வேகம் கலந்த பரபரப்பும் அந்நாளில் கிடையாது.

டிராமில் பயணம் செய்வது குஷியான அனுபவம் என்றால் டிக்கெட் வாங்காமல் போவது. அதைவிட குஷி! நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/122&oldid=1146113" இலிருந்து மீள்விக்கப்பட்டது