பக்கம்:பழைய கணக்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பகத்சிங் வாசகசாலை

சேலம் ஆதிநாராயண செட்டி என்பவர் அந்தக் காலத்தில் ரொம்பப் புகழுடன் விளங்கியவர். அவர் ஒருமுறை ஏதோ ஒரு தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் சம்பந்தமாக எங்கள் கிராமத்துக்கு என் தந்தையின் உதவியை நாடி வந்திருந்தார்.

“ஆதிநாராயண செட்டிக்கே ஓட்டுப் போடுங்கள்” என்று கலர் கலராய்ப் போஸ்டர்கள் கொண்டு வந்தார். அவை பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தன. கிராமம் முழுவதும் அவற்றைச் சுவர்களில் ஒட்டும் வேலையை அப்பா என்னிடம் ஒப்படைத்தார். நான் முதல் முதல் பெரிய அச்செழுத்துக்களை வர்ணத்தில் பார்த்து மயங்கியது அப்போதுதான்.

எங்கள் பக்கத்து கிராமம் அக்கூர் எல்லையம்மன் கோயிலில் ஆடு கோழிகளைப் பலியிடும் பழக்கம் உண்டு. இதைத் தடுப்பதற்காகச் சென்னையிலுள்ள ஜீவரட்சக சங்கத்தார் சில போஸ்டர்கள் அச்சிட்டு அந்தக் கோயில் வாசலில் ஒட்டியிருந்தார்கள்.

“மானிடர்களே! நாங்கள் வாயில்லாப் பிராணிகள், எங்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆடுகளும் கோழிகளும் கொட்டை எழுத்துக்களில் முறையிட்டன!

சென்னை தங்கசாலைத் தெருவில் இருந்த தென்னித்திய ஜீவரட்சக சங்கத்துக்கு இம்மாதிரி போஸ்டர்கள் அனுப்பும்படி கடிதம் எழுதிக் கேட்டிருந்தேன். அடுத்த வாரமே என் பெயருக்குக் கற்றை கற்றையாகப் போஸ்டர்கள் வந்து சேர்ந்தன.

“விசுவநாதன், போஸ்ட்” என்று உரக்கக் கூவி அழைத்து வந்த தபால்காரர் என்னிடம் அவற்றைப் பட்டுவாடா செய்து விட்டு குடிப்பதற்கு மோர் கேட்ட போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை. சமுதாயத்தில் எனக்கொரு பெரிய அந்தஸ்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/131&oldid=1146122" இலிருந்து மீள்விக்கப்பட்டது