பக்கம்:பழைய கணக்கு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

விட்ட செய்தியைத் தெருத் தெருவாகப் போய்ச் சொல்லிவிட்டு வந்தேன். அப்படியும் யாருமே வந்து புத்தகம் கேட்டபாடில்லை. “இலவச வாசகசாலை தான்; யார் வேண்டுமானாலும் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்” என்று தீவிரப் பிரசாரம் செய்தும் கூட ஒரு வாசகர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இது பெரிய ஏமாற்றம்!

“பகத்சிங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தோம். செய்து விட்டோம். கடமை முடிந்தது” என்ற திருப்தி கிருஷ்ணமூர்த்திக்கு.

ஊர் மக்கள் இப்படிக் கைவிட்டு விட்டார்களே என்ற மனச்சோர்வு எனக்கு.

வடாற்காடு மாவட்டம் பற்றிக் கேலியாகச் சொல்வதுண்டு. அதாவது: -

அரசனில்லாத கோட்டை.

சாமி இல்லாத கோயில்.

தண்ணீர் இல்லாத ஆறு.

அழகில்லாத பெண்கள்.

இந்நான்கும் இந்த மாவட்டத்துக்கே உரித்தான சிறப்பு என்று கூறுவார்கள்.

அத்துடன் ஐந்தாவதாக இன்னென்றும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். வாசகன் இல்லாத வாசகசாலை என்பதுதான் அது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/134&oldid=1146125" இலிருந்து மீள்விக்கப்பட்டது