பக்கம்:பழைய கணக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தினமும் மாம்பலத்து திடீர்ப் பிள்ளையாரைப் பற்றி எழுதுகிறார்களே! இதனால் விற்பனை அதிகரித்திருப்பதாகக் கேள்விப் பட்டேனே!” என்றார்.

அப்போது மாம்பலத்தில் திடீர்ப் பிள்ளையார் பூமியிலிருந்து கிளம்பி தினம் ஒர் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த திடீர்ப் பிள்ளையாரைப் பார்க்கப் பெரும் கூட்டமாகக் கூடிக் கொண்டிருந்தார்கள்.

“பெரியவா நினைக்கிற மாதிரி அது ரிலிஜன் எழுதுவதால் ஆகும் விற்பனை அல்ல. தெய்வ பக்திக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஒரு பரபரப்பான செய்தியில் சஸ்பென்ஸும் சேர்ந்து கொண்டது. அதனால் விற்பனை கூடி உள்ளது. அவ்வளவுதான்”

“ஒகோ, அப்படி நினைக்கிறாயா, சரி நீ போகலாம்” என்பது போல் தலையசைத்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/27&oldid=1145696" இலிருந்து மீள்விக்கப்பட்டது