பக்கம்:பழைய கணக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

எல்லோரும் தடி அடிக்குப் பயந்து மூலைக்கு மூல பாய்ந்து ஓடிய போது எனது வலது தோள் பட்டையில் வேகமாக ஓர் அடி விழுந்தது. “அம்மாடி!” என்று சுருண்டு விழுந்தேன். அதற்குள் சிலர் என் மீது விழவே நான் இடையில் மாட்டிக் கொண்டேன். மேற்கொண்டு விழுந்த அடிகளே அவர்கள் தாங்கிக் கொண்டனர். சிலருக்கு எலும்பு முறிந்து போயிற்று. கை, கால், காது, மூக்கு இழந்த்வர்கள் பலர். இந்த லத்தி சார்ஜ் அரைமணி நேரம் நடந்தது. பிறகு அடிபட்டவர்கள் எல்லோரையும் சிறை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஒரு வாரத்துக்குப் பின் சிறைக்குள் மீண்டும் அமைதி ஏற்பட்டதும் ஒருவருக்கொருவர் மெதுவான குரலில் குசலம் விசாரித்துக் கொண்டோம். என் மீது விழுந்த அடி வலது தோளுக்குக் கீழ் முதுகுப் பக்கம் விழுந்ததால் அது கொழுக் கட்டை அளவுக்குப் பெரிதாக வீங்கிப் போய் விட்டது. அதைச் சுட்டிக் காட்டி என் நண்பர்களிடம் நான் சொன்னேன்.

“பாருங்கப்பா, என் ஆசை நிறைவேறிப் போச்சு! பிள்ளையார் சதுர்த்தியன்றைக்குப் பெரிய கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்டேன், இல்லையா? இதோ பாருங்க, முதுகிலே கிடைச்சிருக்கு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/36&oldid=1145709" இலிருந்து மீள்விக்கப்பட்டது