பக்கம்:பழைய கணக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எம். ஜி. ஆர். கோபத்துக்கு என்ன காரணம்?

நான் தினமணி கதிரில் இருந்த போது ஒருநாள் வித்வான் லட்சுமணன் எனக்கு போன் செய்து, “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். எம். ஜி. ஆர். உங்களைப் பார்க்க விரும்புகிறார். தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும்” என்று கூறி, தேதி நேரம் இடம் மூன்றையும் குறிப்பிட்டார். அவர் விருப்பப்படியே நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போய் எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.

அன்று எம். ஜி. ஆர் அவர்களின் அன்னையார் நினைவு நாள்.

“வருடா வருடம் என் அன்னையின் நினைவு நாளன்று நான் மிகவும் விரும்பும் ஒருவரை அழைத்து அவருக்குப் பாயசம் தருவேன், இந்த ஆண்டு உங்களுக்கு” என்று பாயசத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். பிறகு அவர் மதிய உணவுக்கு உள்ளே சென்ற போது கூடவே என்னையும் அழைத்துச் சென்று பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

“ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா?” என்று கேட்டார். இரண்டொரு வாரம் மட்டுமே படித்ததாகச் சொன்னேன்.

“இப்போது உங்களை அழைத்தது எதற்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“உங்கள் தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன்.”

“அதற்கென்ன, தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் ஒரு சின்ன நிபந்தனை. உங்கள் கேள்வி பதில் பகுதியை எப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/67&oldid=1146009" இலிருந்து மீள்விக்கப்பட்டது