பக்கம்:பழைய கணக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

திரு பாலசுப்ரமணியன். நான் அதற்குமேல் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. சக உதவியாசிரியர்களிடம் மட்டும் வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருப்பேன்.

“ஒஹோ... அப்படியென்றால் திருவள்ளுவர். இப்போது உயிரோடு இருந்து அவர் விகடனில் குறள் எழுதினால் குறளின் நீளத்தை அளந்து அதற்குத் தகுந்தபடி அவருக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்தான் சன்மானம் கொடுப்போம் இல்லையா?”

இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்தது திரு பாலு அவர்கள் காதுக்கு எட்டியிருக்க வேண்டும். மறுநாளே என்னை அவர் அழைத்து “நான் யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வது ரொம்ப சரி. அளந்து கொடுக்கும் முறை நியாயமில்லைதான். தரத்தைப் புரிந்து கொடுக்கும் முறையையே நாம் இனி பின்பற்றுவோம். அடுத்த இதழில் ‘வணக்கம்’ என்ற தலைப்பில் இது பற்றி எழுதி விடுங்கள்.‘இனிமேல் கட்டுறைகளை‘ஸ்கேல்’ வைத்து அளந்து சன்மானம் தர மாட்டோம். இலக்கியங்களின் தரத்தை, அதன் நீளத்தைக் கொண்டு மதிப்பிடப் போவதில்லை. தரத்துக் கேற்றபடியே படைப்புகளுக்கான சன்மானம் அமையும்’ என்று விளக்கமாக ஓர் அறிவிப்பு எழுதி விடுங்கள்” என்றார். நான் அவ்வாறே எழுதி அவரிடம் கொடுத்தேன்.

திரு பாலு அவர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டுச் சில திருத்தங்களுடன் வெளியிட்டார். அந்த வாரத்தோடு ஸ்கேல் வைத்து அளக்கும் முறை கைவிடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/80&oldid=1146023" இலிருந்து மீள்விக்கப்பட்டது