பக்கம்:பழைய கணக்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“பொய் சொல்லாதே!”

நான் பத்திரிகை உலகிலிருந்து விடுபட்டு, இடையில் ஓராண்டு காலம் குஸ்திச் சண்டையில் ஈடுபட்டிருந்தேன். நானே குஸ்தி போடுவதில்லை. போடுபவர்களைக் கூட்டி வைத்துப் போட்டி நடத்தும் வேலையைத்தான் செய்து வந்தேன். அப்போதெல்லாம் மல்யுத்தம் என்று சொன்னலே உடனடியாக ஞாபகத்துக்கு வரும் பெயர்கள் கிங்காங்—தாராசிங்தான். இருவரும் எந்த மேடையில் மோதிக் கொண்டாலும் அங்கே ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடி விடுவார்கள்.

கோயம்புத்தூரில் இந்த குஸ்தி நடக்கும்போது தமிழில் நேர்முக வர்ணனை செய்வது என் வேலை. அப்போதெல்லாம் நடு நடுவே ஏதேனும் ஜோக் அடித்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பேன்.

ஒருநாள், கிங்காங் கம்பீரமாக மேடை மீது ஏறி வந்தபோது “இதோ வருகிறது பாருங்கள் மாமிச பர்வதம்! நானுாறு பவுண்டு எடை” என்று நான் கமெண்ட் அடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள். அதைக் கேட்டதும் கிங்காங்கிற்குக் கோபம் வந்துவிட்டது. உடனே மேடையின் ஓரத்துக்கு வந்து கயிற்றின் மீது சாய்ந்து அங்கே ஓரத்தில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து, “பொய் சொல்லாதே; நான் நானூறு பவுண்ட் அல்ல” என்று சத்தம் போட்டார். பிறகு சில வினாடிகள் சஸ்பென்ஸ் கொடுத்து, "“நான் 396 பவுண்டுதான். நீ அதைத் திருத்திச் சொல்” என்று என்னை மிரட்டினார். அதாவது தன் எடையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/81&oldid=1146024" இலிருந்து மீள்விக்கப்பட்டது