பக்கம்:பழைய கணக்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

அவ்வளவு கரெக்டாகச் சொல்ல வேண்டுமாம். உண்மையில் அவர் எடை 396 பவுண்ட்தான் என்பது கூடச் சந்தேகம்தான்!

ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே தாரா சிங்கிற்குத்தான் அதிகம். அவர் நம் நாட்டவர் என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. கிங்காங்குக்குச் சரிநிகர் சமானமாய் சமர் செய்யத் தக்க மல்யுத்த வீரராக விளங்கியவர் அவர் ஒருவர்தான். தாரா சிங் இல்லாமல் கிங்காங் வேறு யாருடன் சண்டை போட்டாலும் அந்த நிகழ்ச்சி அவ்வளவாக எடுபடுவதில்லை.

கோவையில் மல்யுத்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போதெல்லாம் லலிதா பத்மினி சகோதரிகள் தவறாமல் வந்து விடுவார்கள். எனது வர்ணனையை ரசித்து மகிழ்ந்து கை தட்டுவார்கள். நான் ஜோக் சொல்லிவிட்டு அவர்களைப் பார்ப்பேன். அவர்களில் யாராவது ஒருவர் சிரித்தாலும்கூட எனக்குக் குஷி பிறந்து விடும். உடனே மேலும் மேலும் ஜோக் அடிப்பேன்!

போட்டியின் நடுவில் கிங்காங் அவ்வப்போது ‘ஃபௌல் கேம்’ ஆடுவதுண்டு. அது அவரது வழக்கம். ரசிகர்களுக்குக் கோபம் வந்தால் கையில் கிடைத்ததை எடுத்து கிங்காங் மீது வீசித் தங்கள் எதிர்ப்பையும் கோபத்தையும் தெரிவிப்பார்கள்.

ஒரு நாள் கிங்காங் அப்படித்தான் தாரா சிங்கின் தலை மயிரைப் பிடித்து இழுக்கவே, ரசிகர்கள் கூச்சலிட்டுக் கையில் கிடைத்ததை எடுத்து மேடைமீது வீசினார்கள். அந்த அளவுக்குக் கோபத்தைத் தூண்டி விட்டார். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்களில் நவ இந்தியா நிருபர் ராமசாமியும் ஒருவர். ஒல்லியான உடல்வாகு. அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் போனார். கிங்காங் தவறாக ஆடியதும் அவர் தம்மை மறந்து தம் காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து கிங்காங் மீது குறி பார்த்து வீசினார், ஆனால் அது கிங்காங் மீது விழாமல் சற்றுத் தள்ளிப் போய் விழுந்தது. இவ்வளவு கலாட்டாக்களுக்கும் இடையே கிங்காங் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

ஒரு வழியாக அமளி அடங்கிப் போட்டி நடைபெற்று முடிந்ததும் அனைவரும் கலந்து செல்ல ஆரம்பித்தார்கள். நிருபர் ராமசாமி மட்டும் தன்னிடம் மிஞ்சியுள்ள ஒரு செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சற்றுநேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/82&oldid=1146026" இலிருந்து மீள்விக்கப்பட்டது