பக்கம்:பவள மல்லிகை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஞ்சியிலும் இன்பம் கி. வா. ஜகந்நாதன்

கூழானுலும் சந்தோஷமாகச் சுவைத்துக் குடிக்கும் கிராம மக்களின் வாழ்க்கையில் உள்ள

ரசமான சம்பவங்களைத் தரும்

தொகுப்பு நூல். # (விலை ரூ. 1 8 .ே அமுத நிலையம் லிமிடெட், சென்னை-18.)

பூசாரி வரம்', 'கல்யாண விளையாட்டு', 'மணமகளின் மிடுக்கு’, ‘மாமன் உறவு’, ‘கஞ்சியிலும் இன்பம்', . த்தான் விஜயம், நகையும் மலரும்', 'வீரத்தின் தோல்வி’, குடும்ப விரிவு', தெம்மாங்கு', சங்கேத சம்பாஷனே, ‘மாமியாரும் மரும்களும்', 'பஞ்சை மகளிர்', 'பொங்கல் களியாட்டம்-ஆகிய பதின்ைகு விஷயங்கள் அடங்கிய அருமையான புத்தகம்.

கஞ்சியிலும் இன்பம்’ என்ற இந்நூலில் ஆசிரியரால் சேகரிக்கப்பட்ட சுவையான காடோடிப் பாடல்கள் பல அடங்ஓ யிருக்கின்றன. நாடோடிப் பாடல்கள் என்று எவற்றைக் குறிப் பிடலாம்? இதற்குப் பதிலாக ஆசிரியர் முன்னுரையில், காட்டிலே மலரும் மலரைப்போல செயற்கையின் வேலேப்பாடுகளின்றி மலரும் பாடல்கள்” என்று குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம், நாடோடிப் பாடல்கள், காலந்தோறும் இடங்தோறும் மாறியும் விரிந்தும் சுருங்கியும் வழங்குபவை. இயற்கையோடு ஒட்டி வாழும் உள்ளமும் வாழ்க்கையும் உடையவர்களுடைய உணர்ச்சியையும் செயல்களேயும் வெளியிடும் அப்பாடல்கள் புலவர் உலகத்துக்குப் புறம்புே நிற்பவை” என்று ஆசிரியர் கூறியுள்ளது சர்லவும் பொருந்தும். பூசாரிப் பாட்டு, கல்யாண விளையாட்ட்ைக் குறிக்கும் பாட்டு, மணமகளின் மிடுக்கு, குடும்ப நிகழ்ச்சிகள், ம்ாமன், அத்தான் முதலியவர்களேக் குறிக்கும் ரசமான பாட்டுகள், குடியானவன் தன் காதலி கஞ்சி கொண்டுவருவதைக் கண்டதும் அடையும் இன்பத்தைக் காட்டும் பாட்டுகள், இன்னும் பல் ரசமான நாடோடிப் பாடல்களே இந்நூலில் நீங்கள் படித்து மகிழலாம். ஒவ்வொரு பாட்டுக்கும் தகுந்த சூழ்நிலையையும் சுற் றுணர்ச்சியையும் சிருஷ்டிக்கும் ஆசிரியரின் விளக்கவுரைகள் நன்ருக இருக்கின்றன. உண்மையான நாடோடிப் பாடல்களேக் சேகரித்து அழகிய முகப்பு, முத்தாய்ப்புவுரைகளுடன் எழுதி வெளியிட்டிருக்கும் இவ்வாசிரியர் நம் பாராட்டுதலுக்குரியவர்.”

-வீரகேசரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/133&oldid=592262" இலிருந்து மீள்விக்கப்பட்டது