பக்கம்:பவள மல்லிகை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் 35.

உறவு கொண்டாடினல் சரியாகிவிடுகிறது என்றேன். ஏன், நான் சொன்னது என்ன, சரிதானே? என்று முதலியா ருடைய மனைவியைப் பார்த்து மங்கையர்க்கரசி கேட்டாள். சரியான பேச்சு" என்று முதலியார் பதில் சொன்னர். -

மங்கையர்க்கரசி, ஞானசம்பந்தன் என்ற பெயர்களே முதலியாரைக் கவர்ந்தன. மங்கையர்க்காசி இனிமையா கத் தேவாரம் பாடினள். அதைக் கேட்டு முதலியார் மிகவும் ஈடுபட்டார். வறண்ட பாலைவனம் போல இருந்த அவர் உள்ளத்தில் அன்பு சுரந்தது. குழந்தை நாளுக்கு நாள் அவர் உள்ளத்தில் இடங்கொண்டான்.

மங்கையர்க்காசி தேவாரம் பாடும்போது அவர் உரு கிப்போவார். ஒரு நாள் அவள், ஈன்ருளுமாய் எனக் கெந்தையுமாய் உடன் தோன்றினாய் ' என்ற பாட்டை அருமையாகப் பாடினுள். முதலியார் உருகிக் கண்ணிர் விட்டார். விம்மினர். பாட்டை கிறுத்தியவுடன் மங்கை யர்க்கரசியை மேலும் கீழும் பார்த்தார். பெருமூச்சு விட் டார். - -

‘ என்ன, அப்படிப் பார்க்கிறீர்களே!' என்று சிரித் துக்கொண்டே கேட்டாள் மங்கையர்க்கரசி.

' ஒன்றும் இல்லை. ஏதோ பழைய ஞாபகம் வந்தது ' என்ருர். - . . . . .

' அதைத்தான் அவளுக்குச் சொல்லுங்களேன். நம் முடைய பெண்ணைப்போல ஆகிவிட்ட பிறகு அவளுக்குத் தெரிவதிலே என்ன தோஷம்?' என்று, எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனேவி சொன்னுள்.

ஒன்றும் இல்லை. உன்னைப்போல ஒரு பெண் இந்த வீட்டில் இருந்து வாழவேண்டியவள். நான் அதற்குக் கொடுத்து வைக்கவில்லை. நடக்கவேண்டியபடி நடந்திருக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/41&oldid=591975" இலிருந்து மீள்விக்கப்பட்டது