பக்கம்:பவள மல்லிகை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தக் கண்ணிர்

(பம்பாயிலிருந்து சில மைல் தூரத்தில் கடலில் எலிபெண் ட்ாத் தீவில் சில:குகைகள் இருக்கின்றன. ஒரு குகையில் அற்புத மான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றில் சில உடைந்திருக் கின்றன. மற்றக் குகைகளில் அநேகமாகச் சிற்பங்களே இல்லே. சில வருஷங்களுக்கு முன் இந்தக் குகைகளுக்குச் சென்று பார்த்தபோது தோற்றிய கற்பனேக் கதையை அன்பர்களுக்குச் சொன்னேன். அதுவே சிறிது மெருகேற்றி இங்கே தரப்படு கிறது.) f

கடலின் கொந்தளிப்பு அதிகமாயிற்று. படகு விலை கொள்ளாமல் கவிழ்ந்து விடுமோ என்ற பயம் யாவருக் கும் ஏற்பட்டது. ஏதோ உல்லாசமாகப் புறப்பட்ட வர்கள் திடீரென்று காற்று இப்படி வீசுமென்று கினைக்க வில்லை. பாய்களை லாகவமாகப் பிடித்தார்கள். மீண்டும் கரைக்குப் போகும் வரையில் அபாயம் வராமல் இருக் குமா? அருகே ஒரு தீவும் அதில் மலையும் தெரிந்தன. அங்கே போய் இறங்குவதே நல்லது என்று தோன்றியது, படகில் இருந்தவர்களுக்கு.

'லோ, படகை இந்தத் தீவுக்கு விடலாமா ? இல்லை, கரைக்கே ஒட்டலாமா ?” என்று கேட்டான் மாணிக்கம்.

"கரைக்கா? அதற்கு உனக்குத் தைரியம் உண்டா? பேசாமல் இந்தத் தீவுக்கு ஒட்டலாம்'

அந்தத் தீவு மலையும் காடுமாக இருக்கிறதே ! அங்கே புலியும் சிங்கமும் இருந்தால் என்ன செய்வது? கடலுக்குப் பயந்து அவற்றிற்கு இரையாவதா?’ என்று கேட்டான் மாணிக்கம்.

என்ருன் நீலன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/72&oldid=592094" இலிருந்து மீள்விக்கப்பட்டது