பக்கம்:பவள மல்லிகை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பவள மல்லிகை

என்ற பெயரை எடுக்கவேண்டுமென்று துரங்கப்பிரியன் ஆசைப்பட்டான்.

இப்படி இருந்துவரும்போது, யாரோ வெளிநாட்டி லிருந்து ஒரு குதிரைக்காரன், எல்லா லட்சணங்களும் பொருந்திய பஞ்சகல்யாணிக் குதிரை ஒன்றைக் கொண்டு வந்தான். துரங்கப்பிரியன் அந்தக் குதிரையைப் பார்த் துப் பிரமித்துப் போனன். அதுவரையில் அவன் காணுத அற்புத அழகோடு விளங்கியது அந்தக் குதிரை. அரச குமாளுகிய அசுவபதியும் பார்த்தான். அந்தக் குதிரையை தனக்குரியதாக்கி உலக முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றி, "இந்தக் குதிரை நமக்குக் கிடைக்கவில்லையே!” என்ற பொருமைத் தீயை மற்ற நாட்டு அரச குமாரர் களிடம் எழுப்பிவிட்டு வரவேண்டுமென்று அவன் விரும் பினன்.

குதிரைக்காரன் தான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே பொருள் பெற்ருன். “இந்தக் குதிசை போகும் இடங் களெல்லாம் மேலும் மேலும் சுயிட்சம் உண்டாகிக் கொண்டே இருக்கும். உங்கள் ராஜ்ய்த்தில் சகல செளபாக்கியங்களும் கிரம்பிவிடும்” என்று சொல்லிக் குதிசையை அரசனிடம் ஒப்பித்தான். பிறகு, "ஒரு சின்ன விஷயம் மகாராஜாவிடம் தெரிவிக்க எண்ணுகிறேன். குதிரைகளின் பெருமையைத் தாங்கள் உணராதவர் அல்ல. இந்தக் குதிரை தெய்விகம் பொருந்திய குதிரை. ஆகையால் இதை வீரமுடையவர்கள் எறி நடத்தவேண்டும். கண்டவர்களிடம் கொடுக்கக்கூடாது. முக்கியமாகஇரண்டு விஷயங்களை வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஒன்று; இதைத் தனியே சவாரி விடவேண்டுமே ஒழிய சதத்தில் பூட்டக்கூடாது; இரண்டு: ராஜகுலத்தில் பிறவாத பெண்கள் இதன்மேல் ஏறக்கூடாது. இந்த இரண்டு நிபந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/94&oldid=592172" இலிருந்து மீள்விக்கப்பட்டது