பக்கம்:பவள மல்லிகை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.பஞ்ச கல்யாணிக் குதிரை 89

தனைகளையும் கடைப்பிடித்து ஒழுகினல் உங்கள் ராஜ்யம் முழுவதும் இந்திர லோகத்தைப் போன்ற விபவத்தை அடையும். இந்த இரண்டு விஷயங்களிலும் தவறு நேர்க் தால் இந்தக் குதிரைக்கும் கெடுதி உண்டாகும்; இதை உடையவர்களுக்கும் தீங்கு நேரும்' என்று கூறி விடை

பெற்றுக்கொண்டு சென்ருன்.

அந்தப் பஞ்சகல்யாணிக் குதிரையை மிகவும் ஜாக் கிரதையாக வைத்துப் பாதுகாத்து வங்கான் அரசன். அரசகுமாரனுகிய அசுவபதி எப்போதும் அதைக் கவனிப் பதிலேயே தன் காலத்தைச் செலவிட்டு வந்தான். ஒரு நல்ல நாளில் அக்குதிரையின் மேல் எறிச் சவாரி செய்தான். அதுவரையிலும் அவன் அத்தகைய ஆனக் தத்தை அடைந்ததே இல்லை. தனக்காகவே தேவலோகத் திலிருந்து அந்தக் குதிரை வந்திருப்பதாகக் கருதினன். நாளடைவில் அசுவபதிக்குக் குதிரையேற்றப் பித்து அதிகமாய்விட்டது. காலையிலும் மாலையிலும் குதிரைமேல் ஏறி நெடுந்து ரம் சென்று வருவான். குதிரை வாயுவேகம் மனுேவேகமாகப் போகும். அசுவபதியின் குறிப்பை அறிந்து அந்தத் திக்கிலேயே செல்லும். வேலிகளையும் கால்வாய்களையும் அகாயாசமாகத் தாண்டிச் செல்லும், அதன் வேகத்தைக் தடுக்கும் வல்லமை உள்ள பொருள் எதுவுமே இல்லை.

இந்தக் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு, ιοφω5 தேசங்களையெல்லாம் ஒரு சுற்றுச் சுற்றிவரவேண்டும் என்ற விருப்பம் ராஜகுமாரனுக்கு உண்டாயிற்று. தன் தந்தை யிடம் அதுமதி பெற்று ஒருநாள் புறப்பட்டான். பலபல ஊர்களுக்கும் நகரங்களுக்கும் சென்ருன். அங்கங்கே உள்ள அதிசயங்களையெல்லாம் பார்த்தான். அங்கிருந்த இனங்களெல்லாம் அவனுடைய குதிரையை ஓர் அதிசயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/95&oldid=592174" இலிருந்து மீள்விக்கப்பட்டது