பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

 மூன்றாவது நாள் தொலைபேசி மணியடித்தது. நண்பன் அறிவழகன் தான் பேசினான்.

“அழகான நாய், அறிவுள்ள நாய், உயர்ந்த சாதி நாய், நன்றாக வளர்ந்த நாய் ஒன்று விலைக்குக் கொடுக்கிறார்களாம், போய்ப் பார்த்து வாங்கிக் கொள்” என்று கூறி முகவரியை எழுதிக் கொள்ளச் சொன்னான்.

மறுநாளே நான் அந்த வீட்டுக்குச் சென்றேன். நாயைக் காட்டினார்கள், அப் படியே என் சிவாஜியைப் போலவே இருந்தது. அதே முகம், அதே கண்கள், அதே பார்வை, அதே சாதி, அதே உயரம் எல்லாம் அதுபோலவே! நிறம் தான்வேறு. என் சிவாஜி பழுப்பு நிறம் முதுகுப் பக்கம் மட்டும் திட்டாக வெள்ளை. இந்த நாய் வெள்ளை நிறம் காதுகளில் மட்டும் பாதி பாதி பழுப்பு நிறம்.

"இந்த நாய்க்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"சிவாஜி!” என்று சொன்னார்கள்.